சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக எல்லைகள் மூடப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது பணிப்பெண்களுக்கான ஏஜென்சி கட்டணம் குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இல்லப்பணிப்பெண்கள் குறித்து ஒரு முக்கிய தகவலையும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து வரும் இல்ல பணிப்பெண்கள் அவர்களுடைய முதலாளிகள் வீட்டில் வாசிக்காமல் தனியாக வசித்தால்,அவர்களை கவனித்துகொள்வதில் அதிக அளவில் சிரமம் ஏற்படும் என்று மனிதவள அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் அப்படி பணிப்பெண்கள் தனியாக வசிக்கும் நேரத்தில் அந்த பணிப்பெண்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது அவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்டாலோ அதற்கு அவர்களுடைய முதலாளிகளே பொறுப்பு என்று ஸ்ட்ராயிட் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு (வேலை அனுமதிச்சீட்டுகள்) விதிமுறைகளின் கீழ், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் (MDWs) தங்கள் முதலாளிகள் இருக்கும் அதே குடியிருப்பில் தங்க வேண்டும். அதே போல வேறு எந்த குடியிருப்பு முகவரியும் பணி அனுமதிச்சீட்டுகளின் கட்டுப்பாட்டாளரால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை MDWக்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து தனித்தனியாக வாழ்வது கண்டறியப்பட்ட “சிறிய எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே” இருப்பதாக MOM குறிப்பிட்டது. MOM அளித்த தகவலின்படி, கடந்த ஜூன் 2021ல் சிங்கப்பூரில் 2,45,600 MDWக்கள் இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில், LIVE-OUT ஏற்பாடுகளுக்காக கடந்த ஆண்டில் சமூக ஊடகங்களில் முதலாளிகள் மற்றும் பணிப்பெண்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்ததாக ST தெரிவித்துள்ளது.
இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து பெண் தொழிலாளர்களை பணியமர்த்த HSS நிறுவனங்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சீனா, மலேசியா மற்றும் தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட வட ஆசிய நாடுகளில் இருந்து இல்ல பணிப்பெண்கள் இங்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் கடந்த 2017ல் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் அதிகரித்த தேவையைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2021ல் இது நிரந்தரமாக்கப்பட்டது.