TamilSaaga

“உள்ளாடை அணியாததால் விமானத்தில் ஏற்ற மறுத்த அதிகாரிகள்” : கைகொடுத்த Boy Friend – பிரபஞ்ச அழகிக்கு ஏற்பட்ட பரிதாபம்

அமெரிக்காவில் புகழ்பெற்ற நபரும் கடந்த 2012ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரும் தான் Olivia Cuplo. இவர் கடந்த வியாழன் அன்று மெக்சிகோவிற்கு செல்ல விமனநிலையத்திற்கு சென்றபோது இவருக்கு திடீரென்று தடுத்து நிறுத்தப்பட்டார். சம்பவம் நடந்தபோது Olivia தனது சகோதரி மற்றும் காதலருடன் கபோ சான் லூகாஸ் என்ற ரிசார்ட்டுக்கு சென்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இவர் விமானத்தில் ஏறாமல் தடுத்து நிறுத்தப்பட காரணம் என்னவென்றால் அவர் Blouse அணியாமல் சென்றதுதான்.

இதையும் படியுங்கள் : “பணியிடத்தில் உயிரிழந்த வெளிநாட்டு தொழிலாளி” : கைக்குழந்தையுடன் கண்கலங்கி நின்ற மனைவி – உதவிய நல்ல உள்ளங்கள்

அந்த மாடல் அழகி சம்பவத்தன்று கருப்பு நிற Crop Top, ஷார்ட்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான ஸ்வெட்டர் அணிந்திருந்தார். இருப்பினும், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் கேட் ஏஜென்ட் ஒருவர் அவரை Blouse அணியுமாறு கேட்டுக் கொண்டார். அப்படி இல்லையென்றால் அவரை அந்த விமானத்தில் ஏற அனுமதிக்க முடியாது என்ட்ரி அந்த அதிகாரி கூறியதாக Oliviaவின் சகோதரி அரோரா கல்போ பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவுகள் காட்டுகின்றன. மேலும் அவரால் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவில், ஒலிவியா தனது காதலன் கிறிஸ்டியன் மெக்காஃப்ரிக்கு சொந்தமான ஒரு ஆடையை மேலே அணிந்திருப்பதை பார்க்கமுடிந்தது.

இதற்கிடையில், அந்த விமானநிலையத்தில் Olivia போலவே உடையணிந்திருந்த மற்றொரு சக பயணியை அரோரா கண்டார். அந்த பெண் நீல நிற க்ராப் டாப், லெக்கின்ஸ் மற்றும் நீண்ட கார்டிகன் அணிந்திருந்த நிலையில் அந்த பெண்ணை எப்படி விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்தனர் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார். மேலும் Oliviaவிற்கு நடந்ததை தெரிவித்தபோது அந்த பெண் மிகவும் ஆச்சர்யத்துடன் அந்த நிகழ்வை பார்த்துள்ளார்.

இதையும் படியுங்கள் : பழ லாரினு நினைத்து சோதனை செய்த சிங்கப்பூர் ICA அதிகாரிகள் : ஆனா சிக்கியது வேற பொருள்

விமானத்தில் ஏறிய பிறகு அரோரா வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், ஒலிவியாவின் காதலன் கிறிஸ்டியன், தனது கைகளை டி-ஷர்ட்டுக்குள் மடக்கி வைத்துக்கொண்டு உறங்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். தனக்காக தனது சட்டையை கொடுத்துவிட்டு தன் காதலர் விமானத்திற்குள் குளிரில் நடுங்குவதாகவும். அவர் நிலை டைட்டானிக் கப்பலில் இருந்து ஜாக் போல இருந்தார் என்றும் அவரை கேலி செய்துள்ளார். இணையத்தில் வைரலான இந்த நிகழ்வு நெட்டிசன்கள் கருத்துக்களுக்கும் ஆளானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒருவர் “மன்னிக்கவும் OC, நீங்கள் பொது வெளியில் அணிந்து செல்லவேண்டிய ஆடைக்கு பதிலாக கடற்கரைக்கு செல்ல அணிய வேண்டிய ஆடையை அணிந்திருந்தீர்கள், என்று கூறி கேலி செய்துள்ளார். அதே நேரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts