சுவா சூ காங்கில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை தற்போது அதிநவீன ஆலையாக உருமாற்றம் பெற இருப்பதாக பொதுப்பணிக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மறுகட்டமைப்பு பணிகள் வரும் 2026 ஆம் ஆண்டுவாக்கில் முடிவடையும் என்றும் கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டில் உள்ள பழமையான நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இந்த ஆலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்டவிருக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு ஆலையில் அதிநவீன நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
செயல்பாடுகள், நிர்வாகம், பாதுகாப்பு ஆகிய அம்சங்களை பெரிய அளவில் மேம்படுத்த பல தொழில்நுட்பங்களை இந்த ஆலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமான பணிகளுக்காக சுமார் 28.8 மில்லியன் வெள்ளி மதிப்பிலான குத்தகைக்கு Binnies SIngapore என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணி கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.