TamilSaaga

சிங்கப்பூரில் தற்போது”S Pass Renewal” சிரமமாக இருப்பதற்கான காரணம்?அவற்றை எதிர்கொள்ள சில யோசனைகள் !

சிங்கப்பூர் : வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்து பணியாற்றும் பணியாளர்களுக்கு S Pass அவசியம். S Pass வைத்திருப்பவர்களுக்கு சம்பளம் அதிகம். இந்த S Pass ஆனது 2 ஆண்டுகள் வரை செல்லபடியாகக் கூடியதாகும். பிறகு அதை renewal செய்து 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். ஒருவேளை உங்களின் S Pass காலாவதியாகி விட்டால் உங்களுக்காக நீங்கள் வேலை செய்யும் நிறுவனமே renewal செய்து தரலாம். S Pass காலாவதி ஆவதற்கு 6 மாதங்கள் இருக்கும் போது, காலாவதி தேதிக்கு முன்பாக கண்டிப்பாக renewal செய்யப்பட வேண்டும்.

ஆன்லைனில் S Pass Renewal செய்வதற்கு 100 சிங்கப்பூர் டாலர்கள் செலவிட வேண்டும். அப்படி renewal செய்யப்படும் S Pass, 10 வேலை நாட்களில் Renewal ஆகி விடும். S Pass Renewal செய்வதற்கு சில குறிப்பிட்ட தகுதிகள் கண்டிப்பாக தேவை. அதோடு, அவர்களின் பாஸ்போர்ட் குறைந்த பட்சம் 7 மாதங்களாக செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். அவரின் சம்பளம் குறைந்தபட்சம் 3000 டாலர்களுக்கு மேல் இருக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களின் S Pass ஐ ரத்து செய்யும் படி சிங்கப்பூர் பணியாளர் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தால், உங்களின் S Pass உடனடியாக ரத்து செய்யப்பட்டு விடும். அப்படி உங்களின் S Pass ரத்து செய்யப்பட்டால் அதற்கு பிறகு 30 நாட்கள் வரை மட்டுமே நீங்கள் சிங்கப்பூரில் இருக்க முடியும்.

சமீபத்தில் சிங்கப்பூர் பணியாளர் அமைச்சகம் NTS permit என்ற புதிய பாசினை அறிமுகம் செய்தது. இதனால் S Pass Renewal செய்வது மிகவும் கடினமானதாக மாறி விட்டது. NTS permit மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கும் சம்பளம் குறைவு தான். S Pass வைத்திருப்பவர்களுக்கு சில அடிப்படை தகுதிகள், திறமைகள் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் செய்யும் வேலைக்கு, உங்களுக்கு தகுதி குறைவாக இருப்பதாக நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் நினைத்தால் உங்களின் S Pass தரம் குறைக்கப்பட்டு, NTS permit ஆக மாற்றப்படும். இதனால் உங்களின் சம்பளம் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புள்ளது.

S Pass Renewal செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், S Pass Renewal செய்வது பெரும் சிரமமானதாக மாறி விட்டது. உங்களின் S Pass Renewal செய்வதில் இருக்கும் சிரமங்களை தவிர்ப்பதற்கும், S Pass தரம் NTS permit க்கும் தரம் குறைக்கப்படாமல் இருப்பதற்கும் நீங்கள் கண்டிப்பாக உங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் S Pass வைத்திருப்பவர்கள் தங்களின் துறை சார்ந்த ஏதாவது ஒரு course ல் சேர்ந்து, படித்து, தங்களின் திறமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில் S Pass ல் நீடிப்பதில் எந்த சிரமமும் ஏற்படாது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts