TamilSaaga

“வீடு கூட இல்ல.. ரோட்டில் பிச்சையெடுத்த இளைஞர் மீது காதல் கொண்ட இளம் பெண்” – அந்த தேவதையின் இளகிய மனதால் இன்று “ஒஹோ” வாழ்க்கை

காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்த்து என்று எதுமே தெரியாது என்பார்கள், இரு உள்ளங்கள் இணைந்துவிட்டதால் இடையில் வேறு தடையேது என்பதற்கு சாட்சியாக நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ காதல் கதைகளை கேட்டிருப்போம். அதுபோலத்தான் இந்த பதிவிலும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே வீடற்ற நிலையில் இருந்த ஒருவரைக் காதலித்து அவருடன் குடும்பம் நடத்தச் சென்ற ஒரு பெண்ணின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

“சிங்கப்பூரில் நீல நிறத்தில் மின்னும் கடல் அலை.. Changi கடற்கரையில் திடீரென கூடிய மக்கள் கூட்டம்” – Loyang வரை நீடித்த Traffic Jam

Jasmine Gorgan என்ற அந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வெளியே அமர்ந்திருந்த வீடற்ற ஒருவரை கண்டபோது தான் இந்த காதல் கதை துவங்கியுள்ளது. அவருடைய பரிதாப நிலையை கண்டு அந்த மனிதனுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க, Macauley Murchie என்ற நபர் அதை வாங்க மறுத்துள்ளார். வேண்டுமானால் உங்களுடைய ஷாப்பிங் பைகளை உங்கள் காரில் ஏற்ற நான் உதவுகிறேன் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து காலத்தை கொஞ்சம் Fast Forward செய்து பார்த்தால் தற்போது அந்த இருவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளார்களாம்.

இந்த இரண்டு ஆண்டுகளில் என்ன நடந்தது இந்த காதல் கதையில், ஜாஸ்மின் அந்த நபரை கண்டு உதவி செய்ய முன்வந்தும் அதை அவர் ஏற்கவில்லை. இந்த சம்பவம் ஜாஸ்மின் மனதில் ஆழமாக பதிய அடிக்கடி அந்த குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட் வாசலில் அந்த நபரை சந்தித்துள்ளார் அவர். ஒரு நாள் இரவு உணவிற்கு இருவரும் சந்தித்து பேச, தங்களை அறியாமலே மணிக்கணக்கில் பேசியுள்ளனர் இறுதியில் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஜாஸ்மின் Macauleyவிற்கு ஒரு போனை பரிசளித்துள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த இருவருக்கும் அந்த போன் தொடர்பு அவர்களை டேட்டிங் செய்ய வழிவகுத்தது. “என்னுடைய நாட்களை நீ அலங்கரித்துவிட்டாய்” என்று அவர் கூற “உங்கள் நியாபகம் என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை” என்று ஜாஸ்மின் கூற அந்த முதல் டேட்டிங் பல நாள் டேட்டிங்காக மாற இருவருக்கு இடையில் காதல் மலர்ந்தது. வீடற்று கிடந்த Macauleyவிற்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் கிடைத்தது. இப்பொது இருவரும் திருமணம் செய்துகொண்ட இரு குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகின்றனர்.

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்” : மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் “சலுகை” – MOM மற்றும் MND கூட்டறிக்கை

உண்மை காதல், தெருவில் இருந்த ஒருவரை இன்று தனக்கென்று ஒரு குடும்பத்தோடு வாழ வைத்துள்ளது என்றால் அந்த காதலின் சக்தியின்றி வேறென்ன சொல்வது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts