TamilSaaga

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்” : மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் “சலுகை” – MOM மற்றும் MND கூட்டறிக்கை

சிங்கப்பூரில் கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் Process (CMP) ஆகிய துறைகளில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்கள் முதலாளிகள் செலுத்தும் (Foreign Worker Levy Rebate) தீர்வையில் கொடுக்கப்படும் தள்ளுபடி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் (ஜூன் 30 வரை) என்று மனிதவள அமைச்சகம் நேற்று மார்ச் 27 வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது முன்னதாக இந்த மாத இறுதியில் காலாவதியாகும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூரில் நீல நிறத்தில் மின்னும் கடல் அலை.. Changi கடற்கரையில் திடீரென கூடிய மக்கள் கூட்டம்” – Loyang வரை நீடித்த Traffic Jam

மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் தேசிய மேம்பாட்டு அமைச்சகம் (MND) நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட ஒரு ஊடக வெளியீட்டில், தொடர்ச்சியான மனிதவள பற்றாக்குறை மற்றும் பெருந்தொற்றால் எழும் உயர்ந்த வணிக செலவுகளின் காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் வணிகங்கள் தங்கள் நிறுவன திறன்களைத் தக்கவைக்க உதவும் வகையில் கடந்த 2020ல் இந்த தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த தள்ளுபடியில் நீட்டிப்பு தேவையா என்பதை வருகின்ற ஜூன் மாதத்தில் உன்னிப்பாக ஆய்வு செய்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. “(வெளிநாட்டுத் தொழிலாளர் லெவி) தள்ளுபடி என்பது ஒரு தற்காலிக ஆதரவாக இருப்பதால், எதிர்கால மனிதவளத் தடைகளுக்கு எதிராக நிறுவனங்கள் நீண்ட கால உற்பத்தி மேம்பாடுகளை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறோம்,” என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு – 3 ஆண்டுகளில் 1500 பேருக்கு வேலையை உறுதிசெய்த OCBC வங்கி

S$1.36 பில்லியன் கட்டுமான ஆதரவு தொகுப்பு மூலம் நிதி உதவி, மனிதவள ஆதரவு மற்றும் COVID-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டம் (COTMA) மூலம் சட்டமன்ற நிவாரணம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுடன் CMP துறையை இந்த தொற்று காலத்தில் அரசாங்கம் ஆதரித்துள்ளதாக MOM மற்றும் MND குறிப்பிட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts