சிங்கப்பூரில் வேலை செய்ய யாருக்கு தான் பிடிக்காது. இருக்கும் எல்லாருக்குமே வீட்டின் பொருளாதாரத்தினை அதிகரிக்க சிங்கையில் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற ஆசையில் இருப்பார்கள். சிலருக்கோ சொந்த நாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் போதே ஆன்சைட் போன்ற சில நாட்கள் வெளிநாடு போனால் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அந்த ஆசையில் இருக்கும் பலருக்கும் இந்த வொர்க் பாஸ் கண்டிப்பாக வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பலாம்.
பலவிதமான வொர்க் பாஸ் புழக்கத்தில் இருக்கிறது. பெரிய தொழில் செய்ய நினைப்பவர்கள், நிறுவனங்களில் பெரிய பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் எனத் தொடங்கி அடிமட்டத்தில் வேலை செய்ய நினைப்பவர்கள் வரை பல பாஸ்கள் இன்னும் சிங்கையில் நடைமுறையில் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் ஒன்றான Miscellaneous Work Pass குறித்து தெரிந்து கொண்டால் உங்களுக்கும் ஒரு கட்டத்தில் உதவலாம்.
கருத்தரங்கில் பேசுபவர்கள், மதப் பணியாளர்கள் அல்லது பத்திரிகையாளர்கள் போன்ற குறுகிய கால வேலைப் பணிகளில் தகுதியுள்ள வெளிநாட்டினருக்காக கொடுக்கப்படுவது தான் Miscellaneous Work Pass.
இந்த பாஸில் வந்து சிங்கப்பூரில் பணி புரிய யாரெல்லாம் தகுதி உடையவர்கள்:
- எந்தவொரு கருத்தரங்கு, மாநாடு, பயிலரங்கம் அல்லது ஒன்று கூடுதல் போன்றவற்றில் நேரடியாக ஈடுபட்டுள்ள ஊழியர்கள். ஆனால் அவை மட்டும் அல்லாமல், ஒரு வெளிநாட்டவர் இன்னும் சில தகுதிகள் இருக்க வேண்டும். அவை:
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு மத நம்பிக்கையுடனும் அல்லது பொதுவாக மதத்துடனும் தொடர்புடையது.
- பொதுவாக எந்த இனத்துடனும் அல்லது சமூகத்துடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது.
- பேச்சாளர், மதிப்பீட்டாளர், உதவியாளர் அல்லது பயிற்சியாளராக ஈடுபடுவது உட்பட, காரணம் தொடர்பானது அல்லது அரசியல் முடிவை நோக்கி இயக்கப்பட்டது.
- ஒரு வெளிநாட்டு மத ஊழியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த மதத்துடனும் தொடர்புடைய பேச்சுக்களை வழங்குபவர்.
- சிங்கப்பூரில் ஒரு நிகழ்வை செய்தியாக்க அல்லது ஒரு கதையை எழுத எந்த சிங்கப்பூர் அரசு நிறுவனமும் ஆதரிக்காத அல்லது நிதியுதவி செய்யாத வெளிநாட்டு பத்திரிகையாளர், நிருபர் அல்லது உடன் வரும் குழு உறுப்பினர்.
- நீங்கள் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட அமைப்பு அல்லது சமூகத்தால் நிதியுதவி செய்யப்பட வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு போணும்… Skill வேணாம் ஆனா சம்பளமும் பெத்த தொகையா கிடைக்கணுமா? அப்போ இந்த கோர்ஸ் பண்ணுங்க… வேலையும் கியாரண்டி தான்!
இந்த மேற்கூறிய தகுதிகள் சிலருக்கு ஒரு குழப்பமும் இருக்கும். நீங்கள் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், இரவு விடுதி, லவுஞ்ச் அல்லது ஹோட்டல் போன்ற பொது பொழுதுபோக்கு இடங்களில் நிகழ்ச்சி நடத்தினால், அதற்குப் Work Permit for performing artiste பெற வேண்டும்.
இந்த பாஸில் வந்து வேலையெல்லாம் தேடக்கூடாது. அதற்குரிய பாஸில் வருவதே நல்லது. Miscellaneous Work Pass 60 நாட்கள் மட்டுமே செல்லுப்படியாகும்.
கம்பெனி முதலாளி அல்லது உள்ளூர் ஸ்பான்சராக, Miscellaneous Work Pass விண்ணப்பத்தை (MWP) ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். பணி தொடங்குவதற்கு குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பாஸ் அப்ரூவ் ஆக கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டு இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- பாஸ்போர்ட்
- நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல்
இந்த பாஸ் அப்ரூவ் ஆக குறைந்தது 2 மாதங்கள் வரை காலம் எடுக்கும். அப்ரூவ் ஆனவுடன் விண்ணப்பத்தில் இருக்கும் ஊழியரின் மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.