TamilSaaga

“இதுவரை சிங்கப்பூரில் 448 Omicron வழக்குகள் உறுதி” : சிங்கப்பூர் River Valley சாலையில் உள்ள பாரில் புதிய Omicron தொற்று குழுமம்

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 448 உறுதிப்படுத்தப்பட்ட Omicron வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 369 வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் மற்றும் 79 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் 10 ஓமிக்ரான் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது சற்று கழகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கபூருடைய பெருமையின் மையப் புள்ளி – Changi Airport

இந்த பார் கிளஸ்டரின் முதன்மை வழக்கு, கேஸ் 280860, தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) விமானம் வழியாக அமெரிக்காவில் இருந்து டிசம்பர் 14 அன்று சிங்கப்பூருக்கு வந்த பயணி என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகை சோதனையின்போது அவருக்கு தொற்று இல்லை, இந்நிலையில் கடந்த டிசம்பர் 18 அன்று அவருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதியானது. டிசம்பர் 15 அன்று வழக்கு எண் 281477 என அடையாளம் காணப்பட்ட ஒரு சக ஊழியரை அந்த பயணி சந்தித்தார், மேலும் இந்த சக ஊழியர் டிசம்பர் 17 அன்று 266 ரிவர் வேலி சாலையில் உள்ள தி வினைல் பாருக்குச் சென்றுள்ளார்.

சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோயியல் ஆய்வுகளில், கேஸ் 281477, 281876 என அடையாளம் காணப்பட்ட பட்டியலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு “வைரஸ் பரவியிருக்கலாம்” என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கிளஸ்டருடன் இணைக்கப்பட்ட அனைத்து 10 வழக்குகளும் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தற்போது லேசான அல்லது அறிகுறிகள் அற்ற நிலையில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் கூறியது, இது தொடர்புத் தடமறிதல் மூலம் வழக்குகளை ரிங்ஃபென்சிங் செய்வதாகக் கூறியது.

இந்நிலையில் ஒரு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டிசம்பர் 17 அன்று வழக்கு எண் 281477 அந்த பாருக்கு சென்ற நேரத்தில் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு PCR சோதனைக்காக MOH ஆல் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts