TamilSaaga

சாப்பாட்டில் காறித் துப்பி கொடுக்கும் அசீம்.. “இதை கேட்க யாருமே இல்லையா”-னு தலையில் அடித்துக் கொள்ளும் விக்ரமன் – பிக்பாஸ் சீசன் 6-ல் நடந்த “துப்பறியும்” சம்பவம்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இரண்டு மூன்று வாரமாக மியூட் மோடில் இருந்த அசீம் மீண்டும் அந்நியனாக மாறி இருப்பது ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி 50 நாட்கள் கடந்து விட்டது. இந்தமுறை எல்லா துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். விஜே மகேஸ்வரி, ஏடிகே, திருநங்கை சிவின் கணேசன், மைனா நந்தினி, ரக்‌ஷிதா, அசீம், விக்ரமன், பொதுமக்களில் இருந்து தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

முதல் இரண்டு வாரத்திலேயே சின்னத்திரை நடிகர் அசீம் செமையாக கன்டெண்ட் கொடுத்தார். சக போட்டியாளரான அயிஷாவை வாடி, போடி என ஒருமையில் கூறியதால் அவர் அசீமை அடிக்க செருப்பை கழட்டினார். அங்கு பத்திக்கொண்டது இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து அசீம் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனால் ரோஸ்ட் செய்யப்பட்டார்.

ராப் பாடகர் அசலுடன் கடைசி இடத்தில் உட்கார்ந்து சின்ன இடைவேளையில் எலிமினேட் ஆகாமல் தப்பித்தார். இதை தொடர்ந்து அவரின் ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்த வாரங்களில் கன்டெண்ட் கொடுப்பதை குறைத்துக்கொண்டார். தன்னை சண்டைக்கு அழைப்பவர்களை கூட லெப்ட் சைடில் டீல் செய்தார். இதனால் ஒவ்வொரு வாரமும் முதல் ஆளாக சேவ் ஆகினார். இந்த அந்நியன் மோட் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இந்த வாரம் அரண்மனை செட்டப் போடப்பட்டு லக்‌ஷுரி பட்ஜெட் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அசீம் படைத்தளபதியாகவும், விக்ரமன் ராஜகுருவாகவும் நடித்தனர். அதில் ராஜாவாக நடிக்கும் ராபர்ட்டுக்கு அசீம் உணவை சாப்பிட்டு பார்த்து தர வேண்டும் என விக்ரமன் கூற சூடானார் அசீம். இதெல்லாம் பிரச்சனையா அதை நான் எப்படி செய்ய முடியும். நாளைக்கு எச்சித்துப்பி கொடுத்தால் உங்களால் சாப்பிட முடியுமா? அதுப்போல தான் அடுத்தவர்கள் சாப்பாடை நான் எப்படி சாப்பிட்டு பார்க்க முடியும் என இருவருக்கும் மோதலே துவங்கியது. அசீம் விக்ரமனை வாயா போயா என ஏகத்துக்கும் கத்த வீடே பற்றி எரிந்தது. ஆனால், கடந்த முறை அசீமிற்கு இருந்த நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த முறை அவ்வளவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts