TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து VTL திட்டத்தின் கீழ் 11 நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? – ஒரு Detailed Report

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூரில் இருந்து மேலும் ஒன்பது நாடுகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லாமல் மற்றும் குறைவான Swab சோதனைகள் மூலம் வரவிருக்கும் வாரங்களில் பறக்க முடியும். அக்டோபர் 19 முதல், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தடுப்பூசி பயணப் பாதை (VTL) திட்டத்தின் கீழ் தனிமைப்படுத்துதலின்றி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

அதேபோல நவம்பர் 15 முதல் இந்த திட்டம் சவுத் கொரியாவிற்கும் பொருந்தும், இப்போது சிங்கப்பூர் VTL திட்டத்தில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன. ஜெர்மனியும் புருனேயும் கடந்த மாதம் இத்திட்டத்தின் கீழ் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் இருந்து அந்த 11 நாடுகளுக்கு பயணம் செய்ய என்ன தேவை என்பதை இங்கே பார்க்கலாம்..

பயணிக்கும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் மற்றும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழ்களைக் வைத்திருக்க வேண்டும். ஒரு நபர் ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி, மாடர்னா அல்லது பிற உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியல் தடுப்பூசிகளின் முழு டோஸ்களை பெற்ற 14 நாட்களுக்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராகக் கருதப்படுகிறார்.

குறுகிய கால பார்வையாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் VTL இன் கீழ் சிங்கப்பூரில் நுழைய தடுப்பூசி பயண பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் பாஸ் விண்ணப்பிக்காமல் தானாகவே VTL ஐ உபயோகிக்க முடியும்.

தென்கொரியா தவிர எட்டு நாடுகளுக்கு VTL இன் கீழ் நுழைவதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 12 காலை 10 மணி முதல் தொடங்கும். சிங்கப்பூருக்கு அக்டோபர் 19 முதல் தொடங்கும். ஜெர்மனி மற்றும் புருனேயைச் சேர்ந்த பயணிகள் கடந்த மாதம் முதல் VTL க்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு இந்த இணையத்தை பாருங்கள்.

Related posts