சிங்கப்பூர் : சிங்கப்பூரில் ஆண்டுதோறும், கிட்டதட்ட ஒரு மாத நிகழ்வாக தமிழ் மொழி விழா நடத்தப்படுவது வழக்கம். அதாவது தமிழ் புத்தாண்டு பிறப்பின் போது இந்த தமிழ் மொழி விழா நடத்தப்படும். இந்த விழா குறித்த நிகழ்ச்சி நிரல் விபரங்கள் காலண்டர் வடிவில் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தமிழ் அமைப்புக்களால் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான தமிழ் மொழி விழாவின் நிகழ்ச்சி நிரல் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ் மொழி விழா மார்ச் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ் மொழி விழா 2024 நிகழ்ச்சி விபரங்கள் :
மார்ச் 30 – தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சி
மார்ச் 31 – இலக்கியச் சங்கமம், திருக்குறள் விழா
ஏப்ரல் 3 முதல் 6 வரை – தமிழ் மொழி பயிலரங்கம்,கம்பரின் கவியாற்றல், ஆற்றல் மிகு தமிழ்
ஏப்ரல் 13- நவரச திருவிழா
ஏப்ரல் 14 – தமிழ்மொழியின் சொல்லாற்றல், தமிழும் இசையும்
ஏப்ரல் 19 :
- தமிழ் மொழியின் மூலம் ஒளிமயமான உலகிற்கான திறனை வளர்த்தல்
காலை 9 முதல் பகல் 1 வரை
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
முன்பதிவு தேவையில்லை - இடம் பொருள் தமிழ்
மதியம் 2 முதல் மாலை 5 வரை
ஏற்பாட்டாளர்கள் : சிற்பிகள் மன்றம்
இடம் : விமானப்படை அருங்காட்சியகம் - இன்பத் தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்
மாலை 6 முதல் இரவு 8 வரை
ஏற்பாட்டாளர் : இந்திய முஸ்லிம் பேரவை
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
ஏப்ரல் 20 :
தமிழோடு வளர்வோம் 2024
காலை 9 முதல் மதியம் 12.30 வரை
ஏற்பாட்டாளர் – தமிழர் பேரவை
இடம் : The POD தேசிய நூலகக் கட்டடம்
பதிவு செய்ய :www.trc.org.sg/progresswithtamil
- ஆற்றலின் கருவறை – தமிழ் வகுப்பறை
காலை 09.30 முதல் மதியம் 12.30 வரை
ஏற்பாட்டாளர் – சிங்கப்பூத் தமிழாசிரியர் சங்கம்
இடம் – உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
பதிவு செய்ய : https://forms.gle/UFMuazCrzr42AAwk8 - பண்பாடும் தமிழும் :
மதியம் 2 முதல் மாலை 4 வரை
ஏற்பாட்டாளர் – இளம் பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்வி கழகம் – NIEC(NP)
இடம் – இந்திய மரபுடைமை நிலையம்
முன்பதிவு தேவையில்லை - தமிழோடு விளையாடு
மதியம் 2 முதல் 04.30 வரை
ஏற்பாட்டாளர் – உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் விஷா இலக்கிய மன்றம்
இடம் – உட்லண்ட்ஸ் வட்டார நூலகம்
முன்பதிவு தேவையில்லை - ஆற்றல் வளர்க்க விரும்பு!
மாலை 6 முதல் இரவு 8 வரை
ஏற்பாட்டாளர் – ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)
இடம் – உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
முன்பதிவு தேவையில்லை - பட்டிமன்றம்
மாலை 06.30 முதல் இரவு 09.30 வரை
ஏற்பாட்டாளர் – தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹொங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு
இடம் : கீட் ஹாங் சமூக மன்றம், சுவா சூ காங்
ஏப்ரல் 21 :
- சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆற்றல்களை வளர்த்தல் : ஆய்வரங்க மாநாடு
காலை 9 முதல் மாலை 6 வரை
ஏற்பாட்டாளர் – சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம்
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
பதிவு செய்ய : http://tinyurl.com/stycaudconf2024 - தமிழ் மின் அகராதி செயலிஅறிமுக நிகழ்ச்சி
காலை 08.30 முதல் மதியம் 12.30 வரை
ஏற்பாட்டாளர் – காஸ்மிக் கன்சல்டன்சி சர்விசஸ்
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
முன்பதிவு தேவையில்லை - சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024)
மதியம் 2 முதல் மாலை 04.30 வரை
ஏற்பாட்டாளர் – தேசிய நூலக வாரியம்
இடம் : மத்திய பொது நூலகம், B1, தேசிய நூலகக் கட்டடம், 100 விக்டோரியா தெரு
முன்பதிவு தேவையில்லை - நம் வாழ்வில் தாவரங்களும் தமிழ் இலக்கியமும்
மாலை 4 முதல் 6 வரை
ஏற்பாட்டாளர் – கேலாங் செராய் சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழு
இடம் – கேலாங் சிராய் சமூக மன்றம்
நுழைவு சீட்டை வாங்க : https://shorturl.at/qrP03 - முத்தமிழ் விழா 2024
மாலை 6 முதல் இரவு 9 வரை
ஏற்பாட்டாளர் – சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
இடம் – உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
முன்பதிவு தேவையில்லை
ஏப்ரல் 27 :
- ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு
காலை 10 முதல் நண்பகல் 12 வரை
ஏற்பாட்டாளர் – அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர்
இடம் – உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
முன்பதிவு தேவையில்லை - நெசவு
காலை 11.30 முதல் மதியம் 01.30 வரை
மதியம் 3 முதல் மாலை 5 வரை
மாலை 06.30 முதல் இரவு 08.30 வரை
ஏற்பாட்டாளர் – தத்வா
மின்னஞ்சல் மூலம் நுழைவுச் சீட்டை வாங்கவும்
ஏற்பாட்டாளர் விபரம் :
surendram- tattvateam@gmail.com - கதை நேரம் 2024
காலை 10 முதல் நண்பகல் 12 வரை
ஏற்பாட்டாளர் – கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்
இடம் : The POD – தேசிய நூலகக் கட்டடம்
முன்பதிவு தேவையில்லை - திரைக்குப் பின்னால் : பாகம் 1
மதியம் 2 முதல் மாலை 4 வரை
ஏற்பாட்டாளர் – சிங்கப்பூர் இந்திய நாடக மற்றும் திரைப்பட ஆர்வலர்கள்
இடம் – The POD – தேசிய நூலகக் கட்டடம்
முன்பதிவு செய்ய – https://shorturl.at/gqrY5 - நீங்களும் கவிஞர் ஆகலாம்
மதியம் 2.30 முதல் மாலை 4 வரை
ஏற்பாட்டாளர் – சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
இடம் – உமறப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
முன்பதிவு தேவையில்லை
ஏப்ரல் 28 :
- அனைத்துலகத் தமிழ்ப் பேச்சு, அரங்கப் பேச்சு போட்டிகள்
காலை 09.30 முதல் மதியம் 12.30 வரை
ஏற்பாட்டாளர் – ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, தமிழ் பேச்சாளர் மன்றங்களுக்கு ஆலோசகர்
இடம் – உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
முன்பதிவு தேவையில்லை - தமிழில் நேர்காணல் போட்டி 2024
மதியம் 1.30 முதல் மாலை 4.30 வரை
ஏற்பாட்டாளர் – தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயம், சிங்கப்பூர்
இடம் – உட்லண்ட்ஸ் வட்டார நூலகம்
முன்பதிவு தேவையில்லை - கவியாற்றல் 2.0
மாலை 6 முதல் இரவு 9 வரை
ஏற்பாட்டாளர் – கவிமாலை சிங்கப்பூர்
இடம் – உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
முன்பதிவு தேவையில்லை - சங்காவின் உணர்வுகளில் நு மனித அனுபவக் கவிதைகள்
மதியம் 2.30 முதல் 3.45 வரை
மாலை 6 முதல் இரவு 7.15 வரை
ஏற்பாட்டாளர் – பிரம்மாஸ்தரா
இடம் – தி ஆர்ட்ஸ் ஹவுஸ்
நுழைவுச் சீட்டு பெற : https://insanga2024.peatix.com/