TamilSaaga

“லட்டு” போல துபாய் வந்திறங்கிய மாடல்.. பாஸ்ப்போர்ட்டில் “Male” என்ற அடையாளம்.. 19 மணிநேர “Nonstop” விசாரணை – மீண்டும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் விமான நிலையத்தில், தாய்லாந்து பெண் ஒருவர் தரையிறங்கிய பிறகு சுமார் 19 மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அதன் பிறகு அவர் தாய்லாந்து செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கையான தாய்லாந்து மாடல் ரச்சயா நோப்பகரூன், பார்ப்பதற்கு பெண் போல இருப்பதாலும் ஆனால் அவருடைய கடவுச்சீட்டில் தான் “ஆண்” என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் துபாய் அதிகாரிகளால் பல மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

“8.25 கோடி ரூபாய் பந்தயக் குதிரை”.. சிங்கப்பூரின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா டிம் டேவிட்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் ஏன் “முக்கியம்”?

தான் மத்திய கிழக்கு நாட்டிற்கு தகுந்த ஆவணங்களுடன் வந்ததாகவும், இருப்பினும் தனது நுழைவு மறுக்கப்பட்டுள்ளது என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் அவர். நோப்பகாரூம் மார்ச் 16 அன்று வெளியிட்ட முகநூல் பதிவில் துபாய்க்கு தான் வந்திறங்கியதில் இருந்து தாய்லாந்திற்குத் திரும்பியது வரை அனைத்து நிகழ்வுகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார். நோப்பகரூன் கடந்த 2014ம் ஆண்டு Miss Tiffany’s pageant போட்டியில் பங்கேற்று First Runner Up என்ற இடத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Muay Thai என்ற ஒரு வகை தாய்லாந்து பாக்ஸிங் குறித்து ஒரு செயல் விளக்கத்தை துபாயில் தற்போது நடந்து வரும் World Expoவில் அளிக்கவே அவர் துபாய் வந்துள்ளார். இதுகுறித்து அவர் முன்பே சில தகவல்களையும் Muay Thai பாக்ஸிங் உடையில் அவர் தோன்றும் சில படங்களையும் தனது முகநூலில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. துபாயில் சுமார் 19 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட பிறகு தாய்லாந்து சென்ற அவர் சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார்.

மேலும் துபாயில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்த அவர் “துபாய் குடிவரவு ஊழியர்களை தான் குற்றம் சொல்லவில்லை என்றும். தனது பாஸ்போர்ட்டில் “ஆண்” என்று பட்டியலிட்ட தனது தாய்லாந்து சட்டத்தைத் தான் நொந்துகொள்வதாகவும் கூறினார். ஆகையால் இதுபோன்ற விஷயங்களில் உடனடியாக மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் இல்லையெனில் இது மேலும் பலரை பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இப்படியும் சில இளசுகள்.. நடுரோட்டில் ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொண்ட சம்பவம் – தலையில் தட்டி கைது செய்த போலீஸ்

துபாயின் குற்றவியல் சட்டத்தின்படி, திருநங்கை அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது. ஒரே பாலினத்தவர்களுக்கிடையிலான பாலுறவு மற்றும் திருநங்கைகளின் பாலின வெளிப்பாடு சட்டத்தால் தண்டிக்கப்படும் குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சுமார் US$2,700 அபராதமும் துபாய் அரசால் விதிக்கப்படலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts