TamilSaaga

இந்த ஸ்கில்லை மட்டும் வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு ப்ரமோஷன் மற்றும் வேலை மாறுவது என அனைத்தும் சுலபமாக இருக்கும்

கடந்த 2012 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு, BCA உடன் இணைந்து இந்த மல்டி ஸ்கில் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த மல்டி ஸ்கில் திட்டத்தின் மூலம் உங்களுடைய திறன்களை மேம்படுத்தவும் மேலும் சிங்கப்பூரில் உங்களுடைய பணி காலத்தை நீட்டிக்கவும் முடியும்.

ஆம், சிங்கப்பூரில் வெளிநாடுகளில் இருந்து வந்து கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்களை உங்களுக்கான அறிய வாய்ப்பு இது. இதன் மூலம் நீங்கள் பணி காலத்தை நீடிப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது ஒரு சிறிய பயிற்சி மட்டுமே இதை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் நிறைய பயனடையலாம். இந்த பதிவில், இத்தகைய பயிற்சியை எப்படி மேற்கொள்ளலாம்? யாரிடம் பயிற்சி பெறலாம்? எப்படி விண்ணப்பிப்பது? என்பது போன்ற சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்

இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் பயன் பெறலாம் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் எப்படி பயன்படும்? இந்த மல்டி ஸ்கில் திட்டத்தின் மூலம், நீங்கள் இன்னும் கூடுதல் ஆண்டுகள் சிங்கப்பூரில் பணிபுரியலாம். மேலும் அதே நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய திறன்களை மேம்படுத்துவதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும், அதுமட்டுமின்றி நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதற்கு இந்த திறன் மேம்பாட்டு திட்டம் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

கடத்த 4-ல் இருந்து 6 ஆண்டுகளாக, நீங்கள் கட்டுமானத்துறையில் பணிபுரித்துக் கொண்டிருந்தால் உங்களால் இந்த திட்டத்தை பயன்படுத்தி உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் ஆண்டுகளை அதிகப்படுத்தி கொள்ளலாம். இதை தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளிகள் மூலம் நீங்கள் பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த மல்டி ஸ்கில் திட்டம் கட்டுமானத் துறையில் பணி புரியும் தொழிலாளர்களுக்காகவே வரையறுக்கப்பட்டதாகும். MOM பொறுத்த வரை, பல வருடங்களாக கட்டுமான தொழில் பணி புரிபவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம், மேலும் அவர்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். வளர்த்துக் கொள்வதன் மூலம், தொழிலாளர்கள் தங்களுடைய பணி காலத்தை 20 வருடங்கள் வரை நீட்டிக்கலாம்.

கட்டுமானத்துறையில், பொது கட்டுமான தொழிலாளிகள், அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மற்றும் லேண்ட்ஸ்கேப் கட்டுமான தொழிலாளிகள் இந்த திட்டத்தின் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டு பணி காலத்தை நீட்டிக்கலாம்.

பொதுக்கட்டுமான தொழிலாளர் குறைந்தபட்சம் 4 வருடம் சிங்கப்பூரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். கூடுதலாக இரண்டு சான்றிதழ்கள் பெற்று இருக்க வேண்டும். ஒன்று SEC(K)2trade certification மற்றொன்று SEC(K) trade certification. இவ்வாறு இருப்பின் அந்த தொழிலாளர் மல்டி ஸ்கில் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 6 வருடங்கள் கட்டுமான தொழில் துறையில் பணிபுரிந்து இருக்க வேண்டும். மேலும் அவர்கள் 120 மணி நேரம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது WSQ Advanced Certificate பெற்றுருக்க வேண்டும்.

லேண்ட்ஸ்கேப் கட்டுமான தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் சிங்கப்பூரில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் அந்த நபர் LCR – இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். WSQ Higher Certificate in Horticulture & Turf Maintenance பயின்று இருக்க வேண்டும். BCA – வுக்கு உட்பட்ட கட்டுமான பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த மல்டி ஸ்கில்லிங் பதிவு 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதற்கு மேல் நீட்டிக்க பட வேண்டும் என்றால் CET மூலம் செய்யலாம். இந்த CET , அரை நாள் பயிற்சி, இந்த பயிற்சியின் போது நீங்கள் பல்வேறு விதமான செயல்முறைகளையும், பொருட்கள் மற்றும் கருவிகளை கையாள கற்றுக் கொள்ள முடியும். எந்தெந்த துறை சார்ந்த கட்டுமான தொழிலாளர்கள் இந்த மல்டி ஸ்கில் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறலாம் என்னும் தெளிவான விவரங்களுக்கு MOM -ன் இணையதளத்தை பார்க்கவும்.

இந்த மல்டி ஸ்கில் திட்டத்தின் மூலம் முதலாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு, நீங்கள், உங்கள் நிறுவனத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணி அமர்த்தி இருக்கிறீர்களா? அதனால் நீங்கள் அரசுக்கு, ஆண்டதோறும் நிறைய வரி செலுத்தி கொண்டிருக்கிறீர்களா ? இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. சிங்கப்பூர் அரசு மல்டி ஸ்கில் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் எண்ணம், ஏற்கனவே கட்டுமான துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களை, மேலும் அவர்களுடைய திறன்களை அதிகப்படுத்தி, பல்வேறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தி, நிறுவனத்தின் லாபத்தை அதிகப்படுத்தலாம்.

ஒரு முதலாளியாக, நிறுவனத்தின் உற்பத்தி திறனையும், நிகர லாபத்தையும் மேம்படுத்தி, செலுத்தும் வரியை குறைப்பதற்கான வழி தான் இந்த மல்டி ஸ்கில் திட்டம். ஆம் , அதை எப்படி பயன்படுத்தலாம்? யார் பயன்படுத்தலாம் ? எவ்வளவு காலம் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

நீங்கள் ஏற்கனவே உங்கள் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களை மெருகேற்றி பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக நீங்கள் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்தின் மூலம் திறன்களை மேம்படுத்துவதால் ஒவ்வொரு தொழிலாளியையும் நீங்கள் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் உங்கள் வேலைகள் தங்கு தடை இன்றி நடைபெறும். இதுமட்டுமின்றி அரசுக்கு நீங்கள் செலுத்தும் வரியையும் குறைக்கலாம். இது போன்ற திறன் மேம்பட்ட தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் புதிய தொழிலாளர்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு திருப்தி அளித்த தொழிலாளர்களை நீங்கள் மேலும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தை வளர்ச்சி அடைய செய்யலாம்.

இந்த மல்டி ஸ்கில் திட்டத்தின் மூலம், எவ்வாறு வரி செலுத்தும் தொகையை குறைக்கலாம் என்றால், பொதுவாக ஒரு முதலாளியாக, நீங்கள் செலுத்தும் வரி இரண்டு காரணங்களை கொண்டு அமையும். ஒன்று உங்கள் தொழிலாளிகளின் தகுதிகள், இரண்டாவது எத்தனை வொர்க் பர்மிட் (WP) அல்லது S-Pass பெற்ற ஊழியர்களை பணி அமர்த்தி இருக்கிறீர்கள். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் தொழிலாளர்களை வெளிநாடுகளில் வரவைக்க தேவையில்லை. உங்களிடம் ஏற்கனவே வேலை செய்யும் தொழிலாளர்களை கொண்டு நீங்கள் உங்கள் பணிகளை முடிக்கலாம். புது தொழிலாளர்கள் எடுக்க போவதில்லை என்பதால் நீங்கள் செலுத்த வேண்டிய வரி தொகையும் குறையும். இது பணியாளர்களுக்காக MOM மற்றும் BCA இணைந்து உருவாக்கிய திட்டம்.

இது போன்ற திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு லாபம் அடையலாம் என்று அறிந்திருப்பீர்கள், இப்பொழுது எங்கு தங்கள் தொழிலாளர்களுக்கு இது போன்ற பயிற்சி அளிக்கப்படும் என்று அறிந்து கொண்டு அவர்களை அங்கு அனுப்பி பயிற்சி பெற வைக்கலாம். இது போன்று சிங்கப்பூரில் நிறைய நிறுவனங்கள் இருக்கிறது குறிப்பாக பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் எது உங்களுக்கு வசதியாகவும், உங்களுடைய தேவையை பூர்த்தி செய்கிறதோ அந்த நிறுவனத்தில் உங்கள் தொழிலாளர்களை பயிற்சி பெற வைக்கலாம்.

நீங்கள், பயிற்சி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் போது BCA அல்லது MOM அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பயிற்சி சான்றிதழ்களே ஏற்றுக் கொள்ளப்படும். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் பட்டியலும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சரியான நிறுவனத்தில் தேர்ந்தெடுத்து, உங்கள் தொழிலாளர்களை திறன்களை மேம்படுத்தி, உங்களுடைய உற்பத்தி திறனை அதிகப்படுத்தி மேலும் வளர்ச்சியடைக!!

Related posts