TamilSaaga

உலகமே வியந்து பார்க்கும் Elon Musk : ஆனால் அவரே மகிழ்ந்து போற்றிய Tesla-வின் “அசோக் எள்ளுச்சாமி” – யார் அந்த தமிழர்?

ஒரு காலகட்டத்தில் பயணம் என்பதே மக்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருந்து வந்தது, சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதனை கொண்டு வாகனங்கள் இயக்கப்பட்டன. இறுதியில் பலநூறு ஆண்டுகளாக முயற்சிக்கு பிறகு இயந்திரங்களால் ஏந்திச் செல்லப்படும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல கோடி ஆண்டு கால மனித வரலாற்றில், பயண முறை என்பதும் பல கோடி ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இயந்திரங்களை கொண்டு மனிதன் இயக்கத்தொடங்கியது சில நூறு வருடங்களுக்கு முன்பு தான். அதன் பிறகு தான் எத்தனை எத்தனை வளர்ச்சிகள்.

இதையும் படியுங்கள் : “குடும்ப வறுமையால் அப்படி செஞ்சுட்டேன்” : சிங்கப்பூரில் மூதாட்டியை ஏமாற்றி பணம் எடுத்த பணிப்பெண் – முடிவு சிறை

பல முன்னனி கண்டுபிடிப்புகளுடன் இன்றைய வாகனங்கள் இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் தங்களுடைய நிறுவனம் தான் அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனமாக இருக்க வேண்டும் என்றும் அனைத்து நிறுவனங்களும் கருதுகின்றன. இந்த நிலையில் பல நிறுவனங்களுக்கும் போட்டியாக களமிறங்கியது Tesla என்ற கார் நிறுவனம். 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு 2008ம் ஆண்டு CEO என்ற அந்தஸ்தை பெற்றார் Elon Musk. Tesla இன்று இந்த அளவிற்கு புகழ்பெற்ற நிறுவனமாக மாற காரணம் Auto Pilot என்ற வசதி தான்.

விமானம் போன்ற உயர்ரக வாகனங்களில் மட்டுமே உள்ள ஒரு அம்சத்தை எலன் மாஸ்க் தனது காரில் கொண்டுவந்தார். கடந்த சில ஆண்டுகளாக சில சர்ச்சைகளை சந்தித்தாலும் படு ஜோராக விற்பனையாகி வருகின்றது இந்த தானியங்கி Tesla கார்கள். Google போன்ற முன்னனி Tech நிறுவனங்கள் கூட செய்யமுடியாத ஒன்றை Elon Musk செய்துகாட்டியது எப்படி என்று பலமுறை அவரை நேர்காணலில் சந்தித்த மனிதர்கள் கேட்டுள்ளனர். அதேபோல சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்களில் அவர் பேசியபோது Teslaவின் மின்னல்வேக வளர்ச்சிக்கு காரணமான Auto Pilot சேவை குறித்து கேட்டபோது. “பொதுவாக Auto Pilot வசதி குறித்து பேசும்போது பலர் என்னை புகழ்கின்றனர் ஆனால் இந்த பாராட்டுக்கெல்லாம் உண்மையான சொந்தக்காரர் “அசோக்” தான் என்று கூறினார். அவர்தான் டெஸ்லா நிறுவனத்தின் “Auto Pilot” துறையின் தலைவர்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் அபகரித்த பணத்தில் மலேசியாவில் வீடு? – மன்னிப்பு கேட்டு மீண்டும் தவறு செய்த பெண் – ஆடிப்போன மருத்துவமனை

ஆமாம் அந்த அசோக் யார்? தமிழரா?.. என்று நீங்கள் எண்ணியது 100 சதவிகிதம் உண்மை, அசோக் எள்ளுச்சாமி என்ற நபர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2005 – 2009 Batchல் தான் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு சென்னையில் உள்ள WABCO என்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு. அமெரிக்காவில் புகழ்பெற்ற கார்கி மெலான் என்ற பல்கலைக்கழகத்தில் Robotics System துறை முதுகலை படிப்பை முடித்துள்ளார். படிப்புக்கு பிறகு பிரபல Volkswagen நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் 2014ம் ஆண்டு Teslaவில் இணைந்தார். தனது கடும் உழைப்பால் தற்போது Auto Pilot பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார் அசோக்.

அசோக் குறித்து கூடுதல் தகவல்கள் இல்லையென்றபோது அவருடைய சில சமூகவலைத்தளங்கள் வழியாக அவர் தமிழர் என்று அறியமுடிந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts