TamilSaaga

விரைவில் முன்பதிவு இல்லாமல் Pfizer/BionTech தடுப்பூசி – திரு. தினேஷ் வாசு டேஷ் அறிவிப்பு

சிங்கப்பூரில் வரவிருக்கும் மாதங்களில் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் முன்பதிவுகள் ஏதுமின்றி ஃபைசர் – பயோ­என்டெக் தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது சுகாதார அமைச்சகத்தின் நெருக்கடி நிலை குழு தலைவர் திரு. தினேஷ் வாசு அவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சுகாதார பராமரிப்பு நிர்வாக காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சிங்கப்பூரில் மாடர்னா தடுப்பூசியை வழங்குகின்ற 11 சமுதாய தடுப்பூசி நிலையங்களும் முன்பதிவு ஏதும் இல்லாமல் நேரடியாக சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள் மற்றும் நீண்டகால பாஸ் வைத்திருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும். மேலும் உரிய நேரம் வரும் பொழுது முன்பதிவுகள் ஏதுமின்றி ஃபைசர் – பயோ­என்டெக் தடுப்பூசிகள் வழங்கும் பணி தொடங்கும் என்று தினேஷ் கூறியுள்ளார்.

மேலும் குறுகிய கால அனுமதி பெற்று சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டவர்களும், குறிப்பாக தங்கள் குடும்பத்தினரை காணவந்து கிருமி பரவலால் நாடு திரும்பமுடியாத பெற்றோர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது என்றும் தினேஷ் கூறினார்.

Related posts