TamilSaaga

சிங்கப்பூரில் அபகரித்த பணத்தில் மலேசியாவில் வீடு? – மன்னிப்பு கேட்டு மீண்டும் தவறு செய்த பெண் – ஆடிப்போன மருத்துவமனை

சிங்கப்பூரில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பல் மருத்துவ உதவியாளர், நோயாளிகளிடமிருந்து சுமார் S$1,58,400 பணத்தைப் பெற்று, அதன் ஒரு பகுதியை மலேசியாவில் சொத்து வாங்கப் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி குறித்து ஆரம்பத்தில் அந்த பெண்மணி பிடிபட்டபோது, தான் மோசடி செய்ததைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார். தன்னை மன்னிக்குமாறும் அந்த பல் மருத்துவரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து நோயாளிகளை ஏமாற்ற வேறு வழியை அவர் கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் AGWO துணையுடன் புத்தாண்டை கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – MOM தகவல்

இறுதியில் அவரது மோசடி வெளியான நிலையில் மலேசியாவைச் சேர்ந்த சார்லின் ஆஷ்பி க்ளே (24) என்பவருக்கு 16 மாதங்கள் இரண்டு வார சிறைத்தண்டனை இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) அன்று விதிக்கப்பட்டது. ஒரு உதவியாளர் என்ற முறையில் நம்பிக்கையை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் கிரிமினல் நடத்தையிலிருந்து பலன்களை பெற்றது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அந்த பெண் ஒப்புக்கொண்டார். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையில் பரிசீலிக்கப்பட்டன.

க்ளே பிளாக் 443, க்ளெமெண்டி அவென்யூ 3ல் உள்ள டாக்டர் ஸ்மைல் டென்டல் கிளினிக்கில் பல் மருத்துவ உதவியாளராகப் அந்த பெண் பணிபுரிந்ததாக நீதிமன்றம் கூறியது. கடந்த அக்டோபர் 2018ல் நோயாளிகளிடமிருந்து பணத்தை பெற தொடங்கினார். NETS அல்லது கிரெடிட் கார்டு போன்ற, உடனடியாகச் சரிபார்க்க முடியாத முறையில் நோயாளி பணம் செலுத்தியதாகத் தோன்றும் வகையில், அவர் தரவுகளை மாற்றியுள்ளார். அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019-க்கு இடையில், அவர் தனது சொந்த வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து, சுமார் S$44,861 மோசடி செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வளர்ச்சி” : உயரும் சிங்கப்பூரின் பொருளாதாரம் – MTI அறிவிப்பு

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பகுதியில், கிளினிக்கின் கணக்காளர் பல் மருத்துவரிடம் கிளினிக் பெற்ற தொகைக்கும் விற்பனை புள்ளி அமைப்பு பதிவுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, க்ளே தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், தனது பணி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று பல் மருத்துவரிடம் கெஞ்சியுள்ளார். மேலும் அங்கு தொடர்ந்து பணிபுரிவதற்கான வாய்ப்பைக் அவரிடம் கேட்டுள்ளார், அதேபோல பல் மருத்துவரிடம் எடுத்த பணத்தை செலுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அந்த கிளினிக்கும் அதற்கு ஒப்புக்கொண்டு கிளினிக்கிற்கு S$44,861 முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை, Clay தனது மாதச் சம்பளத்தில் இருந்து S$650 முதல் S$1,050 வரை கழிக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அவர் தனது செயலை மாற்றிக்கொள்ளவில்லை தொடர்ந்து நோயாளிகளிடமிருந்து க்ளே தொடர்ந்து பணத்தை தவறாகப் பெற்று மீண்டும் அதே தவறை செய்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts