TamilSaaga

வேட்டி கட்டி விமானத்தை இயக்கிய ஒரே “தமிழன்” – வியந்து நின்று அண்ணாந்து பார்த்த அமெரிக்கா!

உலக அளவில் பல வேலைகள் மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகின்றது, அதிலும் குறிப்பாக பொதுமக்களை சுமந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்கள் சில சமயங்களில் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகின்றனர். தனது பயணிகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று தனது உயிரை துச்சமென நினைத்து செயல்பட்ட ஓட்டுநர்கள் இங்கு பலருண்டு. அது போல பல மக்களின் வாழ்கை ஒருவரின் கையில் சில மணிநேரங்கள் உள்ளது என்றால் அது ஓட்டுநர்களிடம் தான். அதிலும் குறிப்பாக விமான பைலட் என்று வரும்போது அவர்களுக்கு தனி மரியாதை உண்டு.

சிங்கப்பூரில் வேலைக்கு சேர பணம் கேட்கும் “முதலாளிகள்”.. வெளிநாட்டு ஊழியர்களின் இயலாமையை காசாக்கும் அவலம்! – “Kickback” குறித்து MOM அதிரடி அறிவிப்பு

அவர்களின் அந்த மிடுக்கான உடை நம்மை நிச்சயம்ஆச்சரியப்படுத்தும், ஆனால் அந்த மிடுக்கான உடையின்றி என் பாரம்பரிய உடையில் தான் தனிநபர் விமானத்தை ஓட்டுவேன் என்று கூறி வாதாடி, சண்டையிட்டு தனியொரு நபராக வேட்டி சட்டையுடன் விமானத்தை இயக்கியுள்ளார் ஒரு இலங்கை தமிழர் ரவிகரன். இவர் ஒரு விமான பைலட் மட்டுமல்ல ரவிகரன் ஒரு ஏவுகணை நாயகனும் ஆவர். வின் பொறியியல் துறையில் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் உள்ளார் ரவிகரன். “அகரன்” என்ற அந்த ஏவுகணை சோதனை செய்துள்ள அவர், அது வெறும் ஆரம்ப நிலை சோதனை தான் என்றும் இன்னும் பற்பல படிகள் முன்னே செல்வதற்கு இது ஒரு ஆரம்பம் என்று கூறியுள்ளார்.

இந்த முயற்சி ரவிகரன் மூலம் கடந்த 2017ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பலர் இவரை பற்றி அறியவே இந்த பதிவு. அமெரிக்க மட்டுமல்ல உலக அளவில் எந்த நாட்டிலும் விமானிகள் வேறு உடை அணிந்து விமானம் ஓட்ட அனுமதி அளிக்கப்படுவதில்லை. இருப்பினும் தனது பாரம்பரிய உடை அணிந்து தான் விமானம் ஓட்டுவேன் என்று கூறி அதை செய்து முடித்துள்ளார் இந்த ஈழ நாயகன். இன்னும் ஒரு சிறப்பாக இவர் தமிழ் பேசும்போது பிற மொழி சொற்களை கலந்து பேசுவதில்லை. தன்னிடம் தமிழ் பேசுபவர்களையும் பிற மொழி சொற்களை கலக்காமல் பேச இவர் ஊக்குவிக்கின்றார்.

சிங்கப்பூரில் ‘இன்டர்நெட் காதல் மோசடி’.. மாறி மாறி “ஏமாந்த” பெண்கள் – சிக்கிய “Shaahi” உணவகத்தின் இயக்குநர்

வின் பொறியியல் ஆய்வுத்துறை மாணவரான ரவிகரன் தனது மொழி மீது கொண்டுள்ள பற்றை அங்குள்ள சக மாணவர்கள் அனைவரும் அறிவர். ஆகவே அவர்களிடையேயும் தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாகியுள்ளார். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள் அப்படி ஓடும்போது உன் தாய் மொழியை மறக்காமல் இரு என்று கூறுகிறார் நமது சிங்க தமிழர் ரவிகரன் ரணேந்திரன்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts