TamilSaaga

கொஞ்சம் கூட இரக்கமில்லையா? உக்ரைன் சாலையில் வந்த கார் : வேண்டுமென்றே இடித்து நசுக்கிய ரஷ்ய பீரங்கி – பதைபதைக்க வைக்கும் வீடியோ

உக்ரைன் நாட்டை ரஷ்ய படை ஆக்கிரமிக்க துவங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, நேற்று பிப்ரவரி 25 அன்று, ஒபோலோன் மாவட்டத்தில் உக்ரேனிய தலைநகர் கீவின் தெருக்களில் ஒரு ரஷ்ய பீரங்கி ஒன்று உள்ளே பொதுமக்கள் இருந்த நிலையில் எதிரே வந்த ஒரு காரை நசுக்கிவிட்டு செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விவாத பொருளாக மாறியுள்ளது. ராணுவ தளங்களை மட்டுமே தாக்குகின்றோம் என்று கூறும் ரஷ்ய ராணுவம் இதுபோன்ற ஒரு செயலை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் Box Office டாப் 10 லிஸ்டில் “வலிமை” முதலிடம் – பிரமிக்க வைக்கும் Report வெளியீடு

பல ட்விட்டர் பக்கங்களில் இந்த காணொளி தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு வருகின்றது, தொலைவில் இருந்து இந்த வீடியோவை எடுத்த பெண்மணி அந்த பீரங்கி காரின் மீது ஏறி நசுக்கியது தன்னை மறந்து கதறுவது நம் நெஞ்சங்களை உலுக்குகிறது. மனித உரிமை ஆர்வலரும் பெலாரஸ் நகர அரசியல்வாதியுமான ஸ்வியட்லானா சிகானுஸ்காயாவின் மூத்த ஆலோசகரான ஃபிரானாக் பேசும்போது “உக்ரைனில், ரஷ்ய டேங்க் ஒன்று சிவிலியன் கார் மீது ஏறியது திகிலூட்டும் காட்சியாக உள்ளது. எனது பிராத்தனைகள் உக்ரைன் மக்களோடு உள்ளன” என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதிஷ்டவசமாக இந்த நிகழ்வு குறித்து வெளியான மற்றொரு காணொளியில், நொறுக்கப்பட்ட காரில் இருந்த வயதான ஓட்டுனர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர் நலமோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முற்றிலும் நொறுக்கப்பட்ட அந்த வாகனத்தில் இருந்த்து பொதுமக்கள் பலர் கம்மிகளை பயன்படுத்தி அந்த முதியவரை வெளியே எடுக்க முயற்சிக்கும் கட்சியும் வீடியோவாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாங்களே கஷ்டத்துல இருக்கோம்; இதுல வெளிநாட்டு ஊழியர்களுக்கு எப்படி அதிக Basic Pay கொடுக்க முடியும்? – சிங்கப்பூரில் முதலாளிகள் “ஆவேசம்”

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்திட முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts