TamilSaaga

இனவாத கருத்துக்களை பேசிய பெண்மணி ? : 5000 டாலர் பிணையில் விடுவிப்பு

MRT ரயிலில் பயணித்தபோது தேவையற்ற இனவாத கருத்துக்களை வேண்டுமென்றே பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட 57 வயதுடைய டான் டியாவ் ஹியோங், விசாரணைக்கு பிறகு நேற்று 5000 டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாக மனநல கழகத்தின் மனநல பரிசோதனைக்காக அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று டான் டியாவ் ஹியோங்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மனநல கழகத்தின் பரிசோதனை முடிவுகள் தயாராகிவிட்டது என்றும் அது தொடர்பில் தனது கட்சிக்காரருக்கு கட்டாய சிகிச்சை ஆணை வழங்க அவர் விண்ணப்பிக்க போவதாகவும் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறை தண்டனைக்கு முன் தங்கள் மன நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி MRTயில் பயணம்செய்தபோது மற்ற பயணிகளும் இனவாதக் கருத்துக்களை கூறினர் என்றும். பின்பு மே 11ஆம் தேதி MRTயில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts