TamilSaaga

சிங்கப்பூர் பயணத்தை தடுத்து நிறுத்திய ஏர்லைன்ஸ்.. தற்கொலை மனநிலைக்கு சென்ற இளைஞர் – இறுதியில் கைக் கொடுத்த Indigo

எங்கிருந்தோ வந்த இந்த கோவிட் பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிவிட்டது. பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துவிட்டது. அன்றாட பிழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியில், வேலையிழந்த மக்களின் பட்டியலோ தினமும் நீள்கிறது. இந்த பெருந்தொற்று இன்னும் என்ன நம்மை என்ன செய்யப்போகிறது என்று நம்மால் யூகிக்கமுடியாத நிலை தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இப்படி நாள்தோறும் பல இன்னல்களை மக்கள் சந்தித்து வரும் நிலையில் விமான பயணங்களும் தற்போது சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள் : லண்டன் நாட்டில் Waiters பணிக்கு ஆட்கள் தேவை

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல எல்லாம் தயார் நிலையில் இருந்தபோதும், திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் ஒருவர்.

என்ன நடந்தது?

தற்போது சிங்கப்பூர் அரசு Omicron பரவல் காரணமாக தனது VTL சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு அது மீண்டும் துவங்கும் நேரத்தில் முன்பு அளிக்கப்பட்டதை விட மிக குறைந்த அளவிலான விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று நமது சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுஒருபுரம் இருக்க VTL அல்லாத சேவைகளின் மூலம் மக்கள் சிங்கப்பூர் – தமிழகம் என்று இருமார்கங்களாக சென்று வர அனுமதி உள்ளது. நமது சிங்கப்பூர் அரசிடம் Entry Approval பெற்று பயணிகள் தமிழக்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கலாம்.

இந்நிலையில் அந்த சிவகங்கை நபர் சிங்கப்பூர் செல்ல Entry Approval பெற்றிருந்தும் அவர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளார் என்று கூறி அவரது பயணத்தை கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளது அந்த விமான சேவை நிறுவனம். நமது தமிழ் சாகாவிற்கு கிடைத்த தகவலின்படி அவர் தனது முதல் டோஸ் தடுப்பூசியை சிங்கப்பூரில் தான் போட்டுள்ளார் என்றும், பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு அடுத்த தடுப்பூசி தற்போதைக்கு NOT REQUIRED என்ற நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் அரசிடம் இருந்து அவருக்கு சிங்கப்பூர் வர ஒப்புதல் கடிதம் இருந்தபோதும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடாத நிலையில் இருந்ததால் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – இது இரண்டாவது முறை.. சிங்கப்பூரில் குடிபோதையில் ஓட்டுநர் மற்றும் போலீசாரை திட்டிய “இந்தியர்” – 5 வார சிறை

ஆனால் இந்த இரண்டு தடுப்பூசி நிலைப்பாடு குறித்த விமான சேவை நிறுவனங்கள் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது செய்வதறியாது தவிக்கும் அந்த நபர் தொடர்ந்து சிங்கப்பூர் செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர் செல்ல பணம் செலுத்தி அவர் ஒருமுறை எரிமர்ந்துள்ள நிலையில் மிகுந்த மனஉளைச்சலுக்கு அவர் ஆளாகி ஒருவித தற்கொலை மனநிலையில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விடாமுயற்சி என்பது நிச்சயம் பலனளிக்கும் என்பார்கள்.. அதேபோல திருச்சி விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் நந்தனா ஏர் டிராவல்ஸ் மற்றும் பாதிக்கப்பட்ட அந்த நபர் மேற்கொண்ட முயற்சியால் அவருடைய பயணத்திற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொண்ட Indigo நிறுவனம் தற்போது அவர் சிங்கப்பூர் வர விமான டிக்கெட் அளித்துள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி நேற்று இரவு அவர் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார்.

Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts