பல்லாயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூமி அதிகளவு இந்த ஆண்டு வெப்பமடைந்துள்ளதாக வானியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மனிதர்கள் அதிக அளவு கார்பன் பயன்பாட்டினை மேற்கொள்வதன் மூலமாக ஏற்படும் பசுமை இல்லா வாயுக்களே இந்த வெப்ப அதிகரிப்பிற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அதிக வெப்பநிலையால் பூமியில் பல்வேறு இயற்கை மாற்றங்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆண்டில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. அதிகபட்ச வெப்பநிலையால் காட்டுத் தீயும் பல நாடுகளில் பரவி வருகின்றது. இந்நிலையில் கச்சா எண்ணெய், நிலக்கரி, எரிவாயு மற்றும் மனிதர்கள் பயன்படுத்தும் பிரிட்ஜ், ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளிவரும் வாயுவின் காரணமாக பூமியின் வெப்பநிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக ஐநாவின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது சாதனைக்கான விஷயம் அல்ல என்றும், பூமி மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதனால் பனிக்கட்டிகள் உருகி நீர்மட்டம் உயரும் காரணத்தினால், பகுதிகளில் சூழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் சீனாவில் அதிகபட்சமாக 126 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குளிர்ந்த காற்று வீசும் அண்டார்டிகா பகுதியில் கூட இந்த ஆண்டு வெப்ப அலைகள் வீசி இருப்பது ஆச்சரியமூட்டும் விஷயமாகும்.
ஜூலை மற்றும் அல்லாமல் ஆகஸ்ட் மாதம் இம்மாதத்திலும் வெப்பநிலையானது அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக கோவில் நிலவிய வெப்பநிலை மற்றும் பனிக்கட்டுகள் ஆகியவற்றை ஆராய்ச்சிக்காக எடுத்து ஆய்வு மேற்கொண்டதில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளில் இதுவே அதிக வெப்பநிலையான மாதம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளது வேதனைக்குரிய விஷயமாகும்.கார்பன் பொருட்களின் உபயோகத்தை குறைத்து மரங்களை அதிகமாக நடுவதே இதற்கு ஒரே வழி என்று விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.