TamilSaaga

மரணத்தில் முடிந்த “டிக்டாக்” சவால்.. நண்பர்கள் கண்முன்னே லாரியில் சிக்கி சின்னாபின்னமான இளைஞர் – அதிர வைக்கும் “the Angel of Death challenge” வீடியோ

டிக்டாக் சவாலை நிறைவேற்ற முயன்று இந்தோனேசிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக தன் உயிரை பறிகொடுத்துள்ளார்.

இந்தோனேசியாவின் coconuts Jakarta செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அங்கு Tangerang பகுதியில் மூன்று பேர் இணைந்து “malaikat maut” என்ற சவாலை நிறைவேற்ற முயன்றிருக்கின்றனர். அதாவது, malaikat maut என்றால் “the Angel of Death challenge” என அர்த்தமாம்.

இந்த சாகசம் எப்படிப்பட்டது என்றால், சவாலை ஏற்றுக் கொண்டிருக்கும் நபர், வேகமாக செல்லும் டிரக்கின் முன்பு பாய வேண்டும். பிறகு டிரக் அந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்குள் லாவகமாக அதிலிருந்து தப்பித்துவிட வேண்டும். இப்படி நடந்தால் அந்த சவாலில் அவர் வெற்றிப் பெற்றவராகி விடுவாராம்.

கடந்த ஜூன் 3 அன்று, மூன்று பேர் இதே சவாலை முயற்சித்துள்ளனர். அப்போது 18 வயதுடைய நபர் டிரக் முன்பு ஓடியிருக்கிறார். ஆனால், டிரக் நிறுத்தப்படவில்லை. வண்டி அவர் மீது மோத, அந்த நபர் டிரக்கின் அடியில் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதுகுறித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த டிரக் டிரைவரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 3 அன்று காலை இந்த சம்பவம் அரங்கேற, அப்போதே அந்த நபரும் உயிரிழந்துவிட்டார் என்று இந்தோனேசிய மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால், ஜூன் 2 அன்று, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் இதே சவாலை இரண்டு சிறுவர்கள் முயற்சித்தனர்.

அதில், 14 வயது சிறுவன் ஒருவனுக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். விபத்துக்குப் பிறகு அவரது பற்கள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts