கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் இருந்த செந்தோசா தீவிற்கு சென்றவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை வானில் கருப்பு நிற வளையம் தென்பட்டதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் வித்தியாசமாக அதை பார்ப்பதற்காக கூறினார். மேலும் எதற்காக அந்த வளையம் தென்பட்டது என்று அனைவரும் சலசலக்க ஆரம்பித்தனர்.
அந்த வளையம் தென்பட்ட நிகழ்வினை அங்கிருந்து நபர் வீடியோ எடுத்து டிக் டாக் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ ட்ரெண்டாகி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்தது.குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மெதுவாக நகர்ந்த அவ்வளையும் பின்பு படிப்படியாக மறைய தொடங்கியது. வளையம் நகர நகர மக்களும் அதை பின்தொடர்ந்தவாறு ஆச்சரியத்துடன் தொடர்ந்தனர்.ஆனால் எதற்காக இந்த வளையம் தென்பட்டது என்ற ஆராய்ச்சியை வானியல் நிபுணர்கள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக 2017 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் செந்தோசா தீவுகளில் இதே போன்று கருநிற வளையம் தென்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. தற்பொழுது இந்த மர்ம வளையத்தினை பற்றிய விஷயம் சிங்கப்பூர் மக்களிடையே ட்ரெண்டாகி வருகின்றது.