TamilSaaga

தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அசரவைக்கும் தகவல்கள்

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் டாப் பணக்கார வீரர்கள் பட்டியலை Sportingfree இணையதளம் வெளியிட்டது.

அதில் முதல் இடத்தை சச்சின் டெண்டுல்கர் பிடித்தாலும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் நபருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

அவர் வேறு யாரும் இல்லை ரசிகர்களால் செல்லமாக “தல” என்று அழைக்கப்படும் நம்ம மகேந்திர சிங் தோனி அவர்கள் தான்.

இவருடைய சொத்து மதிப்பு சுமார் 767 கோடி. டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சச்சினுக்கு இணையான பெயரும் புகழும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

ஐ.பி.எல் விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக இன்னும் விளையாடி வருவதால் விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப், பிராண்டு அம்பாசிடர் என இவரது வருவாய் பெருகி வருகிறது.

Related posts