TamilSaaga

கிடைத்தது 2 டாலர், பறிபோனது 70,000 டாலர் : இணையவழி மோசடி – எச்சரிக்கும் சிங்கப்பூர் போலீஸ்

இணையத்தில் ஒரு வீடியோவை அல்லது ஒரு புகைப்படத்தை கிளிக் செய்ய வெகு சில வினாடிகளே தேவைப்படுகிறது. சிங்கப்பூரில் ஒரு பெண்மணிக்கு ஒரு பதிவை கிளிக் செய்ய வெறும் சில சொற்ப நொடிகளே தேவைப்பட்டது. அதை கிளிக் செய்ததன் மூலம் அவருக்கு சுமார் 2 டாலர்கள் கிடைத்துள்ளது.

இதனை கண்டு அந்த பெண் மகிழ்ச்சி அடைந்த நிலையில் ஒரு அந்த 2 டாலர் அவருக்கு PayNow மூலம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்ற நிலையில் வெளிநாட்டு நம்பரில் இருந்து whatsapp செயலி மூலம் ஒரு SMS அவருக்கு வந்துள்ளது.

அது ஒரு வேலைவாய்ப்பு சம்மந்தமாக நடக்கும் மோசடி என்பதை அறியாத அந்த பெண் கடந்த மாதம் வெறும் 3 நாட்களில் சுமார் 70,000 டாலரை இழந்துள்ளார். இதுபோல பல மோசடிகளை குறித்து போலீசார் எச்சரித்து வரும் நிலையில் மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதே சிறந்தது.

சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகள் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம் செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு சம்மந்தமான 133 மோசடிகள் பதிவாகியுள்ளன என்றும், அதன் மூலமாக சுமார் 2,20,000 டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் 2019ம் ஆண்டில் 36 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 72,000 டாலர்களை இழந்துள்ளனர்.

Related posts