TamilSaaga

சிங்கப்பூரில் இன்று முதல் அமலாகும் கோவிட் 19 கட்டுப்பாடுகள் – High Alert

சிங்கப்பூரில் கடந்த ஜீலை மாதம் 12ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது கோவிட் தொற்று அதிகரிப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கம் வெளியிட்டது. இவையனைத்தும் இன்று முதல் அமலாகிறது.

உணவு மற்றும் பானக்கடைகள் போன்றவற்றில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் வருபவர்கள் 2 பேர் மட்டுமே குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி. இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா நெகட்டீவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே 5 பேர் கொண்ட குழுவாக சாப்பிடலாம்.

அதே போல் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் ஒரே வீட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் 5 பேராக அமர்ந்து உண்ணலாம்.

வகுப்பறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்ற உட்புற நடவடிக்கைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 2 பேர் கொண்ட குழுவாக மட்டுமே செயல்பட அனுமதி. இரு தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் 5 பேர் கொண்ட குழுவாக செயல்படலாம். எனினும் இரண்டு பிரிவுக்குமே அதிகபட்சம் 30 பேர் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் சமூக கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது.

Related posts