TamilSaaga

அதிகரித்த தொற்று பரவல் : சிங்கப்பூரில் பிரபல Tekka மையத்தின் முதல் தளம் இன்று முதல் மூடல்

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் உள்ள “டெக்கா மையத்தின்” முதல் தளம், அதன் ஹாக்கர் சென்டர் மற்றும் ஈரச்சந்தைகள், இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பல நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஆழமான சுத்தம் செய்யும் பணிக்காக மூடப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகள் அமைந்துள்ள இரண்டாவது மாடியில் வழக்கம் போல் வியாபாரம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சோங் பாகர் GRC-யின் MP திரு. ஆல்வின் டான், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறுகையில், டெக்கா மையத்தின் முதல் மாடி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என்றார். காரணம் “ஹாக்கர் மையங்கள் மற்றும் ஈரச்சந்தைகளில் புரவலர்கள் உண்பது மற்றும் முகமூடி அணியாமல் செல்வது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று அவர் கூறினார். “இந்த டெக்கா மார்க்கெட்டுக்கு அடிக்கடி வருபவர்கள், மற்றும் கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறித்து நாங்கள் தகவல்களை சேகரித்து வருகின்றோம். மேலும் தடுப்பூசி போட்டிருந்தாள், குறிப்பாக பூஸ்டர் ஷாட் போட்டிருந்தாள் அவர்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை என்று அவர் கூறினார்.

தனித்தனியாக, திரு டான் ஒரு பேஸ்புக் பதிவில், கடந்த சில மாதங்களாக டெக்கா மையத்தில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை அமல்படுத்துவது முடுக்கிவிடப்பட்டுள்ளது. “நான் அடிக்கடி டெக்காவில் இருக்கிறேன், மேலும் பல ஸ்டால் உரிமையாளர்கள் தடுப்பூசி போடப்படுகிறார்கள், அதனால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் கடுமையான விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

வர்த்தக மற்றும் தொழில், மற்றும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சராக இருக்கும் திரு டான் மேலும் கூறுகையில் “கடந்த சில வாரங்களாக, எங்கள் நிறுவனங்கள் பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டுமென்றே மீறும் ஸ்டால் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பி வருகின்றோம் என்றார்.

Related posts