TamilSaaga

2022ல் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்.. சிங்கப்பூரின் நிலை என்ன? – உலகமே வியக்கும் 111 வயது பெண் “வாங்கா” கணிப்பு

ஒரு தனி நபருக்கோ, குடும்பத்துக்கோ ஜோசியம் சொல்லி பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் உலகத்துக்கே ஜோசியம் சொன்ன நபரை பார்த்து இருக்கீங்களா? கேள்விப்பட்டாவது இருக்கீங்களா? ஆம்! அப்படி ஒருவர் இருந்திருக்கிறார். அவர் கணித்த விஷயங்களில் பல உண்மையில் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது. இதோ, 2022-ஐ நோக்கி உலகமே காத்துக் கொண்டிருக்கையில், அவரது கணிப்புகள் இப்போது அனைத்து செய்தித் தளங்களையும் ஆக்கிரமித்துள்ளன. அவர் பெண் பாபா வாங்கா. Vangeliya Pandeva Gushterova எனும் Baba Vanga . இவர் பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்.

கண் தெரியாத வாங்கா, தனது 85 வயதில் 1996-ஆம் ஆண்டு காலமானார். இவர் பல்கேரிய நாஸ்ட்ராடமஸாக (nostradamus) மதிக்கப்படுகிறார், வணங்கப்படுகிறார். 50 ஆண்டுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு சம்பவங்களை முன் கூட்டியே கணித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இவரது கணிப்புகள் முற்றிலும் திகிலூட்டுவதாக இருந்தாலும், அவற்றில் 68% உண்மையாகியுள்ளதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் தி மிரர் உறுதிப்படுத்துகிறது.

பெண் பாபா வாங்கா கணித்த சம்பவங்கள்:

2016ல் மிகப்பெரிய ஐஎஸ் அமைப்பு போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவார்கள் என்றும், 2043ல் ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் ஆட்சியை நிறுவுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

கோவை – சிங்கப்பூர் : வாரம்தோறும் மூன்று நாட்கள் சேவை – சிங்கப்பூர் Fly Scoot நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவின் வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என கணித்திருக்கிறார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட அந்த தாக்குதல் உலகையே அதிரச் செய்தது. அதேபோல், அமெரிக்காவின் 44-வது அதிபராக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அவர் சொன்னது போல், பராக் ஒபாமா அதிபராக பதவியேற்றார். பின், 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார்.

இப்படி இவர் கூறிய, கணித்த விஷயங்களில் பல நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலகம் இன்னமும் முழுமையாக மீளாத நிலையில், வரும் 2022ம் ஆண்டை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பெண் பாபா வாங்கா, 2022ம் ஆண்டு குறித்து கணித்துள்ள தகவல்கள் தற்போது பேசுபொருளாக உள்ளது.

2020ல் அவரது கணிப்புகளில் சில நடந்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2020ல் ஐரோப்பா காணாமல் போகும் என்று அவர் கணித்திருந்தார்.பிரெக்ஸிட்டை (Brexit) மனதில் வைத்துதான் வாங்கா அப்படி கூறியிருக்க வேண்டும் என்று அனைவரும் நம்புகின்றனர். அத்துடன் 2020ல் ஐரோப்பாவை ரசாயன ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தாக்குவார்கள் என கூறியிருக்கிறார்.

அமெரிக்கவின் 45-வது அதிபர் டிரம்ப்) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறினார். அதுவும் பலித்தது.

பாபா வாங்காவின் 2022-க்கான கணிப்புகள் தற்போது வைரலாகி உள்ளன.

2022ல் உலகின் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளின் ஆபத்து அதிகரிக்கும் என்று வாங்கா கணித்திருக்கிறார். இதற்கு முன், 2004ல் சுனாமி குறித்து வாங்கா முன்னறிவித்து இருந்ததாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளின் கடலோரப் பகுதிகள் சுனாமி பேரலையால் மூழகடிக்கப்படும் என்றும் கணித்து உள்ளார்.

சிங்கப்பூர்.. புதிய Work Pass, Long-Term Pass மற்றும் பல Passக்கு தடுப்பூசி கட்டாயம் – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்

சைபீரியாவில் இதுவரை அமைதியாக உறைந்திருந்த ஒரு புதிய மோசமான வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிவார்கள் என்றும், புவி வெப்பமடைதலின் பேரழிவு விளைவுகள் காரணமாக, எதிர்பார்த்ததை விட வைரஸ் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக பரவும் என கணித்துள்ளார்.

குறிப்பாக, அண்டை நாடான இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வாங்கா கணித்துள்ளார். 2022ல் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் மோசமாக இருக்கும் என்றும், இதனால் பயிர்கள் மற்றும் விவசாய நிலங்கள் பெரியளவில் பாதிக்கப்படும், பஞ்சம் ஏற்படும் எனவும் கணித்து உள்ளார்.

2130 ஆம் ஆண்டில், வேற்று கிரகவாசிகளின் ஆலோசனைப்படி, நீருக்கடியில் வாழும் கலையை இந்தியா கற்றுக்கொள்ளும் என்றும் கணித்திருக்கிறார். 2022-ல் உலகின் பெரிய மாபெரும் நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்றும், ஆறுகள் மாசுபடுவதால் புதிய நீர் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

இக்கட்டான நிலை.. இந்தியாவை விட்டுக் கொடுக்காத “சிங்கப்பூர்” – 2 வருடத்தில் செய்த “வானளவு” உதவிகள் – Complete Report

மிக முக்கியமாக, 2022ல் உலக மக்கள் ஆன்லைன் பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கும் என்றும் மக்கள் கற்பனையை யதார்த்தத்துடன் குழப்பும் சூழல் உருவாகும் என்றும் கூறியுள்ளாராம் . இவையனைத்தும் வாங்காவை பின்தொடருபவர்களால் மட்டுமே அதிகம் நம்பப்படுகிறது.

கடைசியில், 5079 இல் இந்த பிரபஞ்சம் அழியும் என்றும் கணித்துள்ளார்.

எனினும், சிங்கப்பூர் குறித்து அவரது குறிப்பில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என்றே தெரிகிறது. சிங்கப்பூர் பற்றிய அவரது கணிப்புகளும் இதுவரை எந்த ஆங்கில ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை. இந்த செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘மிரர்’ செய்தித் தளத்திலும் சிங்கப்பூர் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை.

எது எப்படி இருந்தாலும், நல்லதே நடக்கும் என்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும்!.

(NOTE: Tamil Saaga Singapore Digital doesn’t vouch for the authenticity of the claims made by the mystic and is not in favour of promoting any superstition.)

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts