TamilSaaga

“சிங்கப்பூர் பெடோக் நீர்த்தேக்கம் பூங்கா” – கம்பிகளால் நசுக்கப்பட்டு புலம்பெயர்ந்த தொழிலாளி பரிதாப பலி

சிங்கப்பூரில் 31 வயதுள்ள வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி ஒருவர் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 11) காலை தன் மீது விழுந்த இரும்புக் கம்பிகளால் நசுக்கப்பட்டு பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது, அந்த ​​எஃகு கம்பிகள் டவர் கிரேன் மூலம் உயர்த்தப்பட்டன என்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : முகக்கவசம் இல்லாமல் சட்டவிரோதமாக மீன் பிடித்த இளைஞர் – நீதிமன்றத்தில் ஆஜர்

சிங்கப்பூரின் பெடோக் நீர்த்தேக்கப் பூங்காவில் உள்ள ஒரு பணித்தளத்தில், ஹோம் டீம் நேஷனல் சர்வீமென்ஸ் (NSmen)க்கான கிளப்ஹவுஸ் கட்டப்பட்டு வரும் இடத்தில் இந்த மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 900 பெடோக் நார்த் ரோட்டில் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சின் லீ கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளி சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் அம்மாவட்ட அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் தற்போது வேலைகள் நடப்பதை நிறுத்துமாறு மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020ல் 30 இறப்புகள் மற்றும் 2019ல் 39 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 35 பணியிட இறப்புகள் தற்போதுவரை ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த மாதம், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில், பண்டிகைக் காலம் நெருங்குவதால், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான பணி நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 15 அன்று, பூன் லேயில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து பூம் லிப்ட் மேடையில் ஏற முயன்றபோது 35 வயதான இந்தியர் ஒருவர் தவறி தரையில் விழுந்தார். அதேபோல நவம்பர் 18 ஆம் தேதி, மற்றொரு இந்திய நாட்டவர் (வயது 43), மண்ணைக் கச்சிதமாக்கப் பயன்படும் அதிர்வு உருளையை இயக்கிக்கொண்டிருந்தபோது, ​​இயந்திரம் கவிழ்ந்து கேபினில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts