TamilSaaga

மிக மோசமான விபத்து.. படுத்தப்படுக்கையான வெளிநாட்டு ஊழியர்.. 4 கைக்குழந்தைகளுடன் தத்தளிக்கும் தாய்!

தாய் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வரும் பலரின் நிலையில் இன்று நல்ல அளவில் முன்னேறி வரும் அதே நேரத்தில் சிலரின் வாழ்க்கையோ மிகுந்த கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்படுகிறது.

“உப்பிட்ட சிங்கப்பூர் மண்ணில் எக்கச்சக்கமாய் எகிறும் உப்பின் பயன்பாடு” – அதிகரிக்கும் Blood Pressure பாதிப்புகள் – அமைச்சர் ஓங் கவலை

முதலில் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்பவர்கள் அங்கு ஒரு நிலையான வாழ்க்கை கிடைத்ததும் தங்கள் குடும்பத்தையும் தங்களுடன் அழைத்து செல்வது வழக்கம். இங்கும் அப்படி குடும்பத்தோடு மலேசியா சென்று நான்கு கைகுழந்தைகளுடன் தனது வாழ்க்கையை இன்பமாய் வாழ்ந்து வந்த ஒரு வெளிநாட்டு ஊழியரின் வாழக்கை சட்டென்று மிகுந்த பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் அந்த வெளிநாட்டு ஊழியர் சிக்கிய நிலையில் தற்போது அசைவின்றி மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக உள்ளார். இந்நிலையில் 4 கைகுழந்தைகளுடன் அந்த தாய் செய்வதறியாது போராடி வருகின்றார். அன்பழகன் என்ற அந்த மலேசிய வாழ் வெளிநாட்டு ஊழியரின் மனைவி துளசிக்கு வேலையும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆகவே தனது குழந்தைகளை காக்க ஒருபுறம், படுக்கையில் கிடைக்கும் கணவரை காக்க ஒருபுறம் என்று இக்கட்டான சூழலில் தவித்து வருகின்றார்.

சிங்கப்பூரில் விமானப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க S$500 மில்லியன் – புதிய வேலைவாய்ப்புகளுக்கு இது வழிவகுக்குமா?

மலேசிய ஊடங்களில் தற்போது இந்த செய்தி அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், பல நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள் என்று நம்பப்படுகிறது.

Related posts