TamilSaaga

“பினாங்கில் தள்ளாத வயதிலும் உழைத்து சாப்பிட்ட மூதாட்டி” – மயக்கமுற்ற நிலையில் கொதிக்கும் எண்ணெயில் விழுந்து பரிதாப பலி!

பினாங்கில் வாழைப்பழ சிப்ஸ் விற்கும் 74 வயதான மூதாட்டி ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 13) தனது கடையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அருகில் இருந்த சூடான எண்ணெய் இருந்த கொப்பரையில் விழுந்து, முகத்திலும் உடலிலும் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27 நாடுகள், 66 நகரங்கள்.. விரிவடைகிறது இந்தியாவிற்கான VTL சேவை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot அறிவிப்பு

மலேசிய சீன நாளிதழான Kwong Wah Yit Poh அளித்த தகவலின்படி, இந்த சம்பவம் கடந்த மார்ச் 13ம் தேதி அன்று மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அந்த மூதாட்டியின் பெயர் Zhong Bixuan, அவரது தலை மற்றும் மேல் உடல் முழுவதும் சூடான எண்ணெய் நிரம்பிய கொப்பரையில் மூழ்கியதால் அவரது முகத்திலும் உடலிலும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் நடந்தபோது அவருக்கு உதவ வந்த பெண்மணி அவர் உடல் முழுதும் காயங்கள் இருந்ததாகவும் வழியில் அவரால் பேசக்கூட முடியவில்லை என்று கூறினார்.

ஜாங் என்ற அந்த மூதாட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வறுத்த வாழைப்பழங்களை விற்பனை செய்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரது இரண்டாவது மகன் சென் ஜென்பிங் ஊடகங்களுக்கு பதிலளிக்கையில், சம்பவத்தின் போது இறந்த அவரது தாயார் தனது 80 வயது தந்தையுடன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார் என்று கூறினார். அவர் தனது தாயின் ஸ்டாலை எடுத்து நடத்துவரா என்று கேட்டபோது, ​​சென் தற்போது செரெம்பனில் தனது சொந்த ஸ்டாலை நிர்வகிப்பதாகவும், ஆதலால் தாயின் கடையை தற்காலிகமாக மூடிவிட்டு, எதிர்காலத்தில் இதுகுறித்து திட்டமிடுவேன் என்றும் அவர் கூறினார்.

2 ஆண்டுகளுக்கு முன்பே நடக்கவேண்டிய திருமணம் : தொற்றால் சிங்கப்பூரில் சிக்கிய தமிழக தொழிலாளர் – ஊரே வந்து வாழ்த்த ஜாம்ஜாமென இன்று திருமணம்

தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்ற நோக்கில் சுமார் 30 ஆண்டுகளாக உழைத்து வந்த ஒரு மூதாட்டி அவர் பணி செய்துகொண்டிருக்கும்போதே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிவான ஒரு பெண்மணியை இழந்துவிட்டோம் என்று அவரது கடையின் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts