TamilSaaga

“குடியுரிமை பாகுபாடு குறித்த புகார்கள் அதிகம் வந்துள்ளன” – பாராளுமன்றத்தில் அமைச்சர் டான் சீ லெங்

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடிய நாடாளுமன்ற அமர்வில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில் குடியுரிமையை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகள் குறித்து அதிக புகார்களை தாங்கள் பெற்று வருவதாக மனிதவள அமைச்சகத்தின் அமைச்சர் டான் சீ லெங் அவர்கள் பாராளுமன்ற அமர்வில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலம் வரை வேலையிட பாதுகாப்பு தொடர்பாகவும் வேலை நடைமுறை கண்காணிப்புக் குழுவினரிடம் ஆண்டுதோறும் சராசரியாக 350-க்கும் மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக பெறப்பட்ட 350க்கும் மேற்பட்ட புகார்களில் 60 விழுக்காடு புகார்கள் குடியுரிமையை தொடர்புடையவை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இனம் மொழி பாலினம் மற்றும் வயது அடிப்படையிலான பாகுபாடுகள் தொடர்பாக இந்த புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் அளிக்கப்பட்ட புகார்களில் பெரும்பாலானவை சரியான ஆதாரம் இல்லாமல் மற்றும் தவறான புரிதல்களால் அளிக்கப்பட்ட புகார்கள் என்று மனிதவள அமைச்சகத்தின் மூத்த துணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியதை டான் உறுதி செய்தார்.

மேலும் நியாயமான வேலை நடைமுறை நெறிமுறைகளை ஆண்டுதோறும் சராசரியாக 35க்கும் மேற்பட்ட முதலாளிகள் மீறியதாகவும். அவ்வாறு மீறிய முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வேலை அனுமதி அட்டை சலுகைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

Related posts