TamilSaaga

2 ஆண்டுகளுக்கு முன்பே நடக்கவேண்டிய திருமணம் : தொற்றால் சிங்கப்பூரில் சிக்கிய தமிழக தொழிலாளர் – ஊரே வந்து வாழ்த்த ஜாம்ஜாமென இன்று திருமணம்

சுமார் இரண்டு ஆண்டுகள் தொற்றால் திருமணம் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது நமது தமிழ் சாகா சிங்கப்பூர் வாசகரும் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவருமான தமிழ் செல்வன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான இந்துமதியை தனது மனைவியாக இன்று (மார்ச் 16) கரம்பிடித்துள்ளார். முதலில் நமது சார்பாக அந்த தம்பதிக்கு நம் உளம்கனிந்த இனிய திருமண நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். வாழ்க மணமக்கள் பல்லாண்டு.

27 நாடுகள், 66 நகரங்கள்.. விரிவடைகிறது இந்தியாவிற்கான VTL சேவை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் Scoot அறிவிப்பு

வெளிநாட்டு வாழ்க்கை என்பது என்றுமே எளிதல்ல என்பதற்கு நமது தமிழ் செல்வத்தின் வாழ்க்கையும் ஒரு உதாரணம். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தை சேர்ந்த மாணிக்கம் யாதவ் மற்றும் வள்ளிக்கண்ணு ஆகியோரின் மகன் தான் தமிழ். DCA முடித்த இவர் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள Ed.Zublin.Ag என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையில் Safety Co-Ordinatorஆக பணிபுரிந்து வருகின்றார்.

இவருக்கும் அவரது மனைவி இந்துமதிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு உலகையே முடக்கிப்போட்டதால் தமிழ் தாயகம் திரும்ப முடியாமல் இவர்களுது மணவாழ்க்கை தொடர்ந்து தடைபட்டு வந்தது. இந்நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் பணி செய்துவந்த நிறுவனத்தின் உதவியுடன் தாயகம் திரும்பி இன்று மார்ச் 16ம் தேதி இந்திய நேரப்படி காலை 7 மணியளவில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் தனது சிங்கப்பூர் நிறுவனத்திற்காக உண்மையாக உழைத்த காரணத்தால் அவரது நிறுவனமே இவருக்கு தனிப்பட்ட முறையில் உதவி, அவரை தமிழகம் செல்ல ஏற்பாடு செய்து பரிசு பொருட்களோடு பணமும் கொடுத்து வழியனுப்பியதாக நமது தமிழ் சாகாவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் மணமகன் தமிழ் செல்வம் கூறியுள்ளார். நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நாம் உழைக்கும்போது, அந்நிறுவனமும் நமக்காக பல விஷயங்களை முன்னெடுப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிராகரிப்பை சிக்ஸர்களால் விரட்டிய சிங்கப்பூரின் மைந்தன்.. IPL தொடரில் கெத்தா களமிறங்கும் டிம் டேவிட் – சாதித்தது எப்படி?

மீண்டும் ஒருமுறை தமிழ் செல்வம், இந்துமதி தம்பதிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

குறிப்பு : இந்த செய்தி தமிழ் சாகா சிங்கப்பூருக்கு கிடைத்த பிரத்தியேக செய்தி

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts