சிங்கப்பூரில் டான்ஜோங் பகரில் உள்ள தேசிய மேம்பாட்டு அமைச்சக கட்டிடத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட தீ விபத்து நீர் ஜெட் மூலம் அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை இன்று ஜூலை 29 அன்று தெரிவித்துள்ளது. நேற்று ஜூலை 28 அன்று இரவு 11:50 மணியளவில் 9 மேக்ஸ்வெல் சாலையில் உள்ள MND கட்டிடத்தின் இந்த தீ சம்பவம் ஏற்பட்டது.
அந்த கட்டிடத்தின் 23 வது மாடியின் வெளிப்புற திறந்தவெளியில் இருந்த சில பொருட்கள் மூலம் இந்த தீ சம்பவம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக SCDF வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் SCDF தெரிவித்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.