TamilSaaga

மார்ச் 27 முதல் மீண்டும் சர்வதேச விமானங்களை இயக்கும் இந்தியா : ஆமா அது என்ன குறிப்பா மார்ச் 27? – ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?

2019ம் ஆண்டு பிறந்தபோது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விமானங்கள் பெரிய அளவில் இயங்காது, போக்குவரத்து முடங்கும், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அஞ்சுவார்கள், காய்ச்சல் வந்தால் மக்கள் அதிர்ச்சிக்கொள்வார்கள் என்றெல்லாம் நம்மிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நாம் நம்பியிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் பல பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி மக்கள் இறப்பதாகவும், பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளதால் சாலைகளில் சீன ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்தபோதும் கூட நாம் பெரிய அளவில் அதை கண்டுகொள்ளவில்லை.

இன்று (மார்ச் 15) முதல் தளர்வடையும் கட்டுப்பாடுகள் – சிங்கப்பூரில் விரும்பும் இடத்திற்கு செல்ல “வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூடுதல் தளர்வு”

ஆனால் அந்த ஒற்றை தொற்று இன்று பல கோடி தொற்றுகளாக உருவெடுத்து பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் இந்த 2022ம் ஆண்டிலும் இன்னும் நம்மால் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியவில்லை. ஆனால் இந்த வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் கடந்த சில மாதங்களாகவே இந்த நிலைமை சீராகி வருகின்றது என்று தான் கூறவேண்டும். அதன் ஒரு ஒருபகுதியாக இன்று முதல் (மார்ச் 15) நமது சிங்கப்பூரில் நெறிப்படுத்தப்பட்ட பெருந்தொற்று நடைமுறைகள் அமலுக்கு வருகின்றது.

அதே போல அண்டை நாடான இந்தியாவில், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு வரும் மார்ச் 27-ம் தேதி முதல் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது இந்திய அரசு. இதனால், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வருவதும், அங்கிருந்து சிங்கப்பூர் வருவதும் எளிதாகவுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்தியா கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்தது. வந்தே பாரத் விமானங்கள் வாயிலாக அத்தியாவசியப் போக்குவரத்து நடந்து வந்தாலும், பொதுவான விமானப் பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைதான் இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் இந்த அனுமதியைப் பொறுத்தவரை, பொதுவாக வெளிநாட்டுத் தொழிலாளர்களால் வரவேற்கப்படக் கூடிய விஷயம்தான் என்றாலும், சில சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும், நிச்சயமாக பழையபடி விமானங்களில் வழக்கமாக சென்று வர முடியாது என்பதுதான் களநிலவரம் என்கிறார்கள் தொழிலாளர்கள். கொரோனா கால கெடுபிடிகள் அதிகம் என்பதால், கொரோனாவுக்கு முன் – கொரோனாவுக்குப் பின் என்றபடியான வேறுபாடுகள் இந்தப் பயணத்தில் இருக்கும் என்பதுதான் நிதர்சனம் என்கிறார்கள்.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் காணாமல்போன “தமிழக தொழிலாளியின் Work Permit” – ஒன்றிணைந்து கண்டுபிடித்துத்தர முயற்சிப்போம்!

சரி தொற்று குறைந்ததால் மீண்டும் பயணம் துவங்கப்படுகிறது சரி, ஆனால் அது என்ன மார்ச் 27 என்ற தேதி, என்ற சந்தேகம் யாருக்காவது எழுந்திருக்கிறதா?. எங்களுக்கு எழுந்தது, ஆகையால் சில நெருங்கி மற்றும் விமான போக்குவரத்தில் அனுபவம் உள்ளவர்களை விசாரித்தபோது. “சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், அதாவது மார்ச் 26ம் தேதி 2020ம் ஆண்டு தான் இந்தியாவில் சர்வதேச விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது.” ஆகவே சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மூன்றாவது ஆண்டு தொடக்கத்தில், அதாவது மார்ச் 27ம் தேதி 2022ம் ஆண்டு இந்த சர்வதேச போக்குவரத்தை இந்தியா மீண்டும் துவங்கவுள்ளது என்று பதிலளித்தனர்”

எது எப்படியோ வெளிச்சம் தெரிகின்றது, மீண்டும் நமது வாழ்க்கை இயல்பை நோக்கி திரும்பும் என்றே ஒரே நம்பிக்கையோடு தொடர்ந்து பாதுகாப்பாக பயணிப்போம் இந்த பெருந்தொற்றை வெல்வோம்.

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts