TamilSaaga

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் : கைதை தவிர்க்க போலீசாருக்கு லஞ்சம்? – 5 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக 49 வயதான நபர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) காவல் துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுக்க முயன்ற முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 2,000 வெள்ளி அபராதம் மற்றும் 15 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்ட சோங் வெய் குவாங் கடந்த டிசம்பர் 14, 2018ம் ஆண்டு அன்று சார்ஜென்ட் லோ வீ மெங் அவர்களுக்கு 1,000 வெள்ளி லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் செலேகி சாலையில் உள்ள பொமோ ஷாப்பிங் மாலில் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அரசு தரப்பு கூறியது. கார் பார்க்கின் பகுதியில் இருந்து வெளியேறும் காண்டிரியில் இருந்தபோது, ​​சோங் தனது வாகனத்தை பின்புறமாக ஓட்டி ஒரு கதவில் மோதியதால், அது தரையில் விழுந்தது.

ஒரு PoMo பாதுகாப்பு அதிகாரி இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்தார் மற்றும் உடனடியாக போலீஸை அழைத்தார். இந்த நிலையில் சோங் அவரிடம் போலீசாரை அழைக்க வேண்டாம் என்று கேட்டார். மேலும் அந்த அதிகாரியிடம் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த CCTVயில் தெளிவாக பதிவாகி உள்ளது.

தற்போது சோங் தண்டனைக்காக வரும் செப்டம்பர் 23ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் ஊழல் குற்றவாளிகளுக்கு 1,00,000 வெள்ளி வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts