TamilSaaga

டெல்லி போனது வீண் போகவில்லை.. ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு கொடுத்த பதவி!

ஓபிஎஸ் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்தரநாத்திற்கு மத்திய அரசு புதிய பதவி வழங்கியுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக மத்திய அரசு இவரை நியமனம் செய்துள்ளது.

மூன்றாண்டு கால இப்பதவிக்கு ரவீந்திரநாத் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக நிதியமைச்சருமான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்கள், வாதங்களை எழுப்பி இருந்தது. தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் பெற்ற வெற்றி அன்றையதினம் அனைத்து செய்தி சேனல்களிலும் தலைப்பானது.

இதன் பிறகு ரவீந்திரநாத் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் ரவீந்தரநாத்-க்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சமீபத்தில் கூட விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையிலும் அதிமுகவுக்கு இடம் கொடுக்கவில்லை என்பது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளை சந்தித்திருந்தது. அதற்கு எதிர்மறையாக தமிழக பாஜக தலைவர் எல் முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி செய்தியாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நீதி பரிபாலன குழு உறுப்பினராக மத்திய அரசு ரவீந்திரநாத்தை நியமித்துள்ளது.

Related posts