TamilSaaga

‘உரிய Work Pass இல்லாத மருத்துவர்’ – சிங்கப்பூரில் பணி செய்ய உதவிய, 12 கிளினிக்கள் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில், பிற நாட்டை சேர்ந்த மருத்துவரை உரிய ‘Work Pass’ இல்லாமல் தங்கள் விற்பனை நிலையங்களில் வேலை செய்ய உதவியதாக பன்னிரண்டு கிளினிக்குகள் மீது இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் முழுவதும் அமைந்துள்ள கிளினிக்குகளில், டிசம்பர் 2011 முதல் மே 2019க்கு இடையில் செல்லுபடியாகும் பணி பாஸ் இல்லாமல் டாக்டர் குவெக் கியான் கெங்கை என்பவரை வேலை செய்ய தூண்டியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டாக்டர் குவெக்கிற்கு செல்லுபடியாகும் பணி பாஸ் இல்லாதபோது நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் தங்கள் கிளினிக்குகளில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் தலா இரண்டு முதல் எட்டு குற்றச்சாட்டுகளை அந்தந்த கிளினிக்குகள் பெற்றன.

SingHealth வலைத்தளத்தின்படி, அவர் 2016ம் ஆண்டில் அதன் வதிவிட திட்டத்தில் பட்டம் பெற்றார் என்றும். சிங்கப்பூர் மருத்துவ கவுன்சிலின் கீழ் மருத்துவ நிபுணராக (நரம்பியல் சிறப்பு) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் இணையதளத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கு, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், கிளினிக்குகளுக்கு தலா 20,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

Related posts