TamilSaaga

“மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு” – எச்சரிக்கும் அமைச்சர் ஆங் யே குங்

நேற்று ஜூலை 28ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் ஓங் ஈ குங், தற்போது சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாட்டில் தற்போது இருப்பில் உள்ள மருத்துவமனை படுகைகளின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த தொற்று பரவல் நிலை தொடர்ந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் படுகைகளின் எண்ணிக்கை மிகவும் குறையும் என்றும் அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் உள்ள தொற்று வழக்குகளில், 21 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் கடுமையான நோய் உள்ளது, மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர். 540க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் நிலையான நிலையில் உள்ளனர், மேலும் 1,234 பேர் சமூக பராமரிப்பு நிலையங்களில் உள்ளனர்.

தேவைப்படும்பட்சத்தில் மோசமான பெருந்தொற்று உள்ள நோயாளிகளுக்கு என்று தயாராக சிங்கப்பூரில் சுமார் 1,000 ICU படுக்கைகளைத் திறக்க முடியும் என்று திரு. ஓங் தெரிவித்தார்.

நாட்டில் பெருந்தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தமுடியாமல் தொடர்ந்து அதிகரித்து வந்தால் எதிர்வரும் வாரங்களில் மருத்துவமனைகளில் உள்ள படுகைகளில் எண்ணிக்கை நிரம்பிவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related posts