கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் கடனை திருப்பிக்கட்டமுடியாத நிலையில் குடும்பமே பலி என்ற இந்த செய்தியை நீங்கள் அவ்வப்போது நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அண்டை நாடான இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் என்ற ஊரில் இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பெண் தான் கலா, இவர் தன்னுடைய குடும்பத்துடன் நெருக்கிய உறவில் இருந்த Alex என்பவருக்கு சுமார் 3 கோடி ரூபாய் சிறுது சிறிதாக கடன் கொடுத்துள்ளார்.
ஆனால் பல ஆண்டுகள் ஆனப்பிறகும் அந்த பணத்தை திரும்பத்தராமல் அவரை ஏமாற்றி வந்த நிலையில் காவல்நிலைய வாசலில் கலா அந்த Alex காலில் விழுந்து கதறும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில் வாங்கிய கடனை திரும்பத் தராத நிலையில் கலா பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் Alex மீது புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விஷயத்தில் தலையிட்டு Alex மற்றும் அவரது மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது தங்கள் நிலத்தை விற்று கலாவிற்கு தரவேண்டிய பணத்தை தந்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு Alex விற்க முயன்றதை அறிந்த கலா உடனடியாக பத்திரவு பதிவு அலுவகம் வாசலில் அமர்ந்து தனி ஆளாக போராட்டம் நடத்தியுள்ளார். பணத்தை திரும்ப கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறியுள்ளார் கலா. வெளிநாட்டில் கணவர் வேலைசெய்து வரும் இந்த நிலையில் சுமார் 3 கோடி பணம் மற்றும் 225 சவரன் நகை ஆகியவரை Alexஸிடம் பறிகொடுத்திவிட்டு இப்பொது அவர் காலில் விழுந்து கெஞ்சி வருகின்றார் கலா.
நிச்சயம் தனக்கு நீதி கிடைத்துவிடும் என்று காத்திருக்கும் இந்த பெண்ணின் நிலை என்னவாகும், அந்த மனித நேயமற்ற மனிதர் வாங்கி பணத்தை கலாவிடம் திருப்பி கொடுப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். வெளிநாட்டில் கணவன் இருக்க தனியே போராடிவரும் இந்த பெண்ணின் வாழக்கை விரைவில் நலம்பெறும் என்று நம்புவோம்.