TamilSaaga

“பார்க்கத்தான போற… இந்த காளியோட ஆட்டத்த”! கடைசியாக ரஜினி பட வசனத்தை பேசி நம்பிக்கையுடன் காத்திருந்த இளைஞர்.. சிங்கப்பூரில் இன்று தூக்கு தண்டனை – பற்றி எரியும் பெற்ற வயிறு!

சிங்கப்பூரில்… இன்று இரண்டு இளைஞர்களின் உயிர் பறிபோக உள்ளது. தெரிந்தே அவர்கள் செய்த தவறுக்கு.. அதாவது சிங்கப்பூரின் சட்டதிட்டத்தின் படி, மன்னிக்கவே முடியாத குற்றத்துக்கு கிடைக்கப் போகும் தண்டனை இது. ஆம்! இருவருக்கும் இன்று (ஜுலை.7) தூக்கு தண்டனை!

என்ன தவறு செய்தார்கள்?

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் கல்வந்த் சிங். வயது 31. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் மொத்தம் 181.05 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் 2016 ஜூன் மாதம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த ஹெராயின் கடத்தல் குற்றச்சாட்டில் முகமது யாசித் எம்டி யூசோப் மற்றும் நோராஷரீ கௌஸ் ஆகிய மேலும் இரு நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் யாசித் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 15 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால், கல்வந்த் சிங் மற்றும் நோராஷரீ கௌஸ் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து இருவரும் செய்த மேல் முறையீடு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. எனவே, 2022 ஜுலை 7ம் தேதி தூக்கு தேதி முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில், கடைசி முயற்சியாக கல்வந்த் சிங் தனது மரணதண்டனைக்கு தடை கோரி நேற்று முன்தினம் விண்ணப்பித்தர். அவர் தனது குற்றவியல் மேல்முறையீட்டை மீண்டும் விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார், அதுமட்டுமின்றி, தனது வழக்கை தானே வாதிட விரும்புவதாகவும் கூறினார்.

இதையடுத்து, நேற்று (ஜுலை.6) அவரது விண்ணப்பம், மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. அனைத்து வாதங்களையும் பொறுமையாக கேட்ட நீதிபதிகள், கல்வந்த் சிங்கின் கடைசி கருணை மனுவை நிராகரித்தனர். இதனால், இன்று (ஜுலை.7) இவர்கள் இருவருக்கும் தூக்கு நிறைவேற்றப்பட உள்ளது.

மேலும் படிக்க – இட்லி வித்தா தான் வீட்டுல அடுப்பெரியும்.. எதிர்நீச்சல் போட்டு தங்கைகளுக்கு தகப்பனாய் வாழும் “தேன்மொழி” – அசராத உழைப்பால் இன்று ஊரே வியக்க குடும்பத்தை உச்சிக்கு கொண்டுச் சென்ற ‘குலசாமி’!

இதற்கிடையே சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலை, இந்த வழக்கு குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “கழுத்தில் கயிறு இறுகும் வரை நான் போராடுவேன் என்று கல்வந்த் சொன்னார். மரணதண்டனையில் உள்ள இரு மலேசிய இந்தியர்களும், தங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபல வசனத்தை பேசினார்கள். “பார்க்கத்தான போற, இந்த காளியோட ஆட்டத்த!” என்ற வசனத்தை தங்களை உற்சாகப்படுத்த பேசியுள்ளனர்.

ஆனால், நேற்று கல்வந்த் சிங்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. கல்வந்த் வழக்கறிஞரும் அவரிடம் கடைசியாக பேச அனுமதிக்கப்பட்டது. நீங்கள் இச்செய்தியை படிக்கும் இந்நேரம் அவர் தூக்கில் இடப்பட்டிருக்கலாம்!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts