TamilSaaga

கூகுளின் புதிய ரூல்ஸ்,  இது வர்த்தகர்களுக்கு பேரிடி?

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கூகுள் நிறுவனத்தின் சேவைகள் பெருவாரியாக பயன்படுத்தப்படுகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை இலவசமாக பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் தங்களுடைய பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும்,சிறப்பாகவும் செய்ய முடிகிறது.
1998ல் கூகுள் நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து இன்று கணக்கிட முடியாத வளர்ச்சியை அடைந்திருக்கிறது. ஆரம்பத்தில் செய்திகளை பரிமாறிக் கொள்ள உதவிய கூகுள் நிறுவனம் இன்று வங்கி சேவைகளையும் செவ்வனே செய்து வருகிறது.

அனைத்து விதமான சேவைகளை கூகுல் நிறுவனம் இலவசமாக தருவதால் இந்த கூகுள் நிறுவனத்தின் சேவைகளை நம்பி பல கம்பெனிகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், பொது சேவை மையங்கள் இயங்குகிறது. அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் கூகுள் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

தற்போது கூகுள் நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.இந்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி 2024ல் அமலுக்கு வரும் என்று தெரிந்து கொள்ளவும்.இந்த அறிவிப்பு ஜிமெயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.உங்களுடைய தினசரி வேலைகளுக்கு நீங்கள் ஜிமெயிலை நம்பி இருக்கிறீர்கள் என்றால் இந்த அறிவிப்பை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஜிமெயில் மூலமாக நாம் செய்திகளை பரிமாறிக் கொள்ள முடியும். இந்த ஜிமெயிலில் நிறைய சேவைகள் அடங்கி இருக்கிறது. இதில் ஒன்று தான் பல்க் ஈமெயில் (bulk email) எனும் சேவை. இந்த சேவை மூலமாக நீங்கள் ஒரு மெசேஜ்ஜை ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்ப முடியும். இந்த ஆப்ஷனை பொதுவாக விளம்பரப்படுத்துவார்கள் வர்த்தக நோக்கத்திற்காக செய்யலாம் அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு தகவல்களை தெரிவிக்க இந்த பல்க் ஈமெயில் வசதியை பயன்படுத்துவார்கள்.


கூகுள் அறிவித்திருக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத எந்த ஒரு பல்க் சென்டர்கள் அனுப்பவும் ஈமெயிலை நிறுவனம் நிராகரித்து விடும். இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது, இதுபோன்ற பல்க் சென்டர்கள் பொதுவாக வர்த்தக நோக்கத்துடன் ஈமெயில் அனுப்புவார்கள்.இது பல சமயங்களில் spam மெசேஜ் ஆக சென்று சேரும். இதை தடுக்கும் நோக்கமாக ஸ்பேம் மெசேஜை குறைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறு பல்க் சென்டர்கள் அனுப்பும் ஈமெயிலை செக்யூரிட்டி செக் செய்து சரியாக இருந்தால் அந்த ஈமெயிலை அனுப்ப முடியும்.

மேலும், ஒரு பல்க் சென்டர் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஈமெயிலை ஒரே நேரத்தில் அனுப்ப முடியாது. அப்படி ஐயாயிரத்துக்கு மேல் ஈமெயில் அனுப்புவார்கள் பல்க் சென்டர் என்னும் ஸ்டேட்டஸ் பெறுவர். நீங்கள் இதற்குப் பிறகு இது போன்ற மெசேஜை அனுப்ப முடியாது. ஒருமுறை நீங்கள் பல் சென்டர் ஆகி விட்டீர்கள் என்றால் உங்களால் மறுபடியும் நார்மல் அக்கௌன்ட் போல் உங்களுடைய ஈமெயிலை பயன்படுத்த முடியாது. எனவே பல்க் சென்டர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


இந்த நிபந்தனை இமெயில் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் இல்லாமல் google workspace பயன்படுத்துபவர்களும் இந்த விதிகள் பொருந்தும். எனவே ஈமெயில் அனுப்புபவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் குறிப்பாக Bulk email அனுப்புபவர்கள் கையாள வேண்டும். கூடுதலாக டொமைன் ஆதண்டிகேசன் ரூல்ஸ்சும் அறிவித்திருக்கிறது. சென்டர்கள் தங்களுடைய அக்கவுண்ட் சரியான முறையில் பாதுகாப்பாக பயன்படுத்தாததால் அவர்கள் எளிதாக தங்களை மறைத்துக் கொள்ள முடிகிறது. இதை தடுக்கும் நோக்கமாக Domain authentication, sender policy framework என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அறிந்திருக்கிறார்கள்.இதன் மூலம் நிச்சயமாக ஸ்பேம் மெசேஜ்க்கு வரும் தேவை இல்லாத ஈமெயில்களை தடுக்க முடியும்.

இது மட்டும் என்று வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் இன்னொரு ரூல் அமல்படுத்த இருக்கிறது google நிறுவனம். அது அன்சப்ஸ்க்ரைப் ஆப்ஷன்,பல்க் சென்டர்கள் தங்களுடைய ஈமெயில் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் ஆப்ஷன் வைத்திருக்க வேண்டும்.இதன் மூலம் ரிசீவர் தங்களுக்கு தேவை இல்லை என்றால் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும்.அது மட்டும் இன்றி அன்சப்ஸ்க்ரைப் செய்தவுடன் அடுத்த 48 மணி நேரத்தில் அன்சப்ஸ்க்ரைப் request பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும் .இவ்வாறு கூகுள் நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருக்கிறது.


இதுபோன்ற அறிவிப்புகள் இமெயில் வசதியை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.செண்டர்களுக்கு விதிமுறைகளை விதிப்பதால் தேவையில்லாத இமெயில் வருவது, அதை கட்டுப்படுத்துவது என்பது போன்ற செயல்களை சிறப்பாக செய்ய முடியும்.இதன் மூலம் ஈமெயில் இப்பொழுது இன்னும் பாதுகாப்பாக செயல்பட முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts