TamilSaaga

சிங்கப்பூர் Raffles Institution.. கேண்டீன் பணியாளருக்கு தொற்று – வீட்டில் இருந்து பயிலும் மாணவர்கள்

சிங்கப்பூரில் ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனில் 1 முதல் 4 வயது வரையிலான மாணவர்கள் இன்று முதல் (ஜூலை 19) முழுமையாக வீட்டில் இருந்தே கல்வி கற்பார்கள் என்று அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளியின் கேண்டீனில் உலா ஒரு ஸ்டாலின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பள்ளியின் முதல்வர் பிரெட்ரிக், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘ஒன்று முதல் நான்கு வயது மாணவர்களுக்கான கான்டீன் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிக்காக பள்ளி மூடப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.

பள்ளி கேண்டீனில் உள்ள ஸ்டால் உதவியாளருக்கு கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் கடைசியாக இருந்தார் என்றும், அப்போது நன்றாக இருந்தார் என்றும் பள்ளி தெரிவித்துள்ளது.

தற்போது பள்ளி நிர்வாகம் Trace Together செயலியை கொண்டு அந்த ஸ்டால் ஊழியருடன் அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கண்டறிந்து வருகின்றது.

Related posts