TamilSaaga

“எங்கள் 18 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டது” : ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரியும் நடிகர் தனுஷ் – ஏன் இந்த தீடீர் முடிவு?

சுமார் 18 வருடங்கள் நண்பர்களாகவும், தம்பதியராகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும்” வாழ்ந்து வந்த நிலையில், தானும் தனது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாக பிரபல நடிகர் தனுஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா, இவர் திரைப்பட இயக்குனரும், பின்னணிப் பாடகியாகவும் திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : கடல் சிங்கத்துக்கும் பெற்ற தாய்க்கும் இடையே சிக்கிய சிறுவன் – சிங்கப்பூர் பூங்காவில் நடந்த மோசமான சம்பவம்

நடிகர் தனுஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்…

ரஜிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவர்களும் இதே பதிவை தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ம் ஆண்டு பிரபல பிரபல பத்திரிகை நிருபரும் நடிகருமான திரு. பயில்வான் ரங்கநாதன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா காதல் குறித்து பல செய்திகளை வெளியிட்டார். அவர் குறியதைப்போலவே 18 நவம்பர் 2004ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. சிறுவயது முதலே தனுஷின் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல நபர்களாக இருந்துவந்துள்ளார். அதன் பிறகு அடிக்கடி தோழியை சந்திக்க அவர்களது வீட்டிற்கு ஐஸ்வர்யா செல்ல அங்கு மலர்ந்தது தான் இவர்கள் இருவருடைய காதல் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அண்ணன் செல்வராகவன் மூலமாக படவாய்ப்புகள் கிடைத்து பிஸி ஆனார் தனுஷ். அப்போது தான் இருவீட்டார் சம்மதத்துடன் நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்தபோது தனுஷுக்கு வயது 21 மற்றும் ஐஸ்வர்யாவுக்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருக்கும் 2006ம் ஆண்டு யாத்ரா என்ற மகனும் 2010ம் ஆண்டு லிங்க என்ற மகனும் பிறந்தனர்.

இதையும் படியுங்கள் : “இன்று இரவு என் மனைவியுடன் படு” – சிங்கப்பூரில் சக ஊழியருக்கு “மனைவியை விருந்தாக்கிய” கணவன்

சுமார் 18 ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாக இருந்த இந்த ஜோடி தற்போது பிரிந்திருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட் வட்டாரத்தின் மிகமுக்கிய செய்தியாக பார்க்கப்படும் இந்த நிகழ்வில் இருவருடைய இந்த முடிவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மணிநேரங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த அவர்கள் தனது ட்விட்டர் DPயை தனது சகோதரி மற்றும் அப்பா ரஜினிகாந்த அவர்களுடன் இருக்கும் புகைப்படமாக Update செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இணையத்தில் ரசிகர்கள் பலர் “ஏன் இந்த முடிவு” என்று பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts