TamilSaaga

சிங்கப்பூர் மருத்துவமனைகளில் உள்ளவர்களை காண கூடுதல் அவகாசம் – கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை காண செல்பவரா நீங்கள்? உங்களுக்கானது இந்த செய்தி.
கொரோனா தொற்று இல்லை என Antigen Rapid Test மூலம் உறுதிசெய்யப்பட்டால் அனுமதிக்கப்பட்ட வார்டுகளில் 20 நிமிடத்துக்கும் அதிகமாக அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தகவலை வெளியிட்டுள்ளது.

அதற்கு சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அவை பின்வருமாறு,

  1. தீவிரமாக நோயால் அவதிப்படுவோரை காண செல்ல அனுமதி

2.குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களை காண செல்ல அனுமதி

  1. மனநலம் பாதிகப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்புக்கு உடன் இருக்க செல்பவர்களுக்கு அனுமதி.

மேற்கண்ட விதிமுறைப்படி பின்பற்றி வார்டுகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 20 நிமிடத்துக்கு மேல் இருக்க விரும்புபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து நெகடீவ் சான்றிதழ் அளிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது அந்த செலவை சுகாதார அமைச்சகமே ஏற்றுக்கொள்ளும். முக்கியமாக 24 மணி நேரத்துக்கு மட்டுமே இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என்றும் 20 நிமிடத்துக்கு குறைவாக வார்டுகளில் இருப்பவர்களுக்கு பரிசோதனை கட்டாயம் இல்லை எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts