பொறியியல், இன்னைக்கு அபார வளர்ச்சியடைந்திருக்கும் உலகத்திற்கு முக்கியமான ஒரு காரணம். இன்றும் பல நாடுகள்ல கோடிக்கணக்கான பொறியாளர்கள் தினமும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கிட்டு இருக்காங்க. ஆனாலும் இந்த வேலைக்கு பல பற்றாக்குறை இருந்துகிட்டு தான் இருக்கு. ஒவ்வொரு நாளும் புதுமைப்படும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ற மாதிரி குறிப்பிட்ட துறையில் பொறியியல் வல்லுநர்கள் தேவைப்படுறாங்க. Bureau of Labor Statistics என்ற அமைப்பின் தற்போதைய புள்ளிவிவரப்படி 2019ல இருந்து 2029 க்குள் 4% புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல பொறியியல் படிப்பதில் பல்வேறு நன்மைகளும் உண்டு. ஆனாலும் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்த தான் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். Robotic Engineering, Electrical Engineering போன்ற பல முக்கிய பிரிவுகள் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும். எனவே எந்த பிரிவில் பயில்கிறோம் என்பது மிக முக்கியம்.
முதல்ல Engineering படிக்கறதுல நமக்கு என்னென்ன நன்மைகள் இருக்குனு பாப்போம்.
முதல்ல Demand: பொறியியல் பட்டதாரிகளுக்கு தற்பொழுது பல தட்டுப்பாடுகள் இருக்கு. மேலே குறிப்பிட்டது போல எதிர்காலத்தில் 4% புதிய புதிய வேலை வாய்ப்புகள் பொறியியல் துறையில் உருவாகும் அதற்க்கு ஏற்ற சிறந்த பொறியாளர்கள் நிச்சயம் தேவை தானே!
அதிக ஊதியம்: உலகத்துல அதிக ஊதியம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள்ல பொறியியல் துறையும் ஒன்னு! ஒரு தேர்ந்த பொறியாளர் வருடத்திற்கு சராசரியாக ரூபாய் 50 லட்சம் முதல் 1 கோடி வரையிலான ஊதியம் பெறுகிறார்.
பல துறைகளிலும் வேலை வாய்ப்புகள்: அனைவரும் அறிந்தாற்போல் பொறியியல் படித்தவர்கள் எந்த துறையில் வேண்டுமானாலும் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் பொறியியல் துறையிலேயே civil engineering, mechanical engineering, Aeronautical engineering, electrical engineering, Robotic Engineering என பல பிரிவுகள் உள்ளன அதற்க்கு தகுந்த பல்வேறு வேலை வாய்ப்புகளும் உள்ளன.
நாளுக்கு நாள் பெருகிவரும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவங்கள், ஆராய்ச்சி மையங்கள் என எங்கும் இதற்கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
உருவாக்கம்: இந்த உலகம் இன்று கண்டிருக்கும் பல முன்னேற்றங்களுக்கு பொறியியல் தான் காரணமா இருக்கு. ஆதியில் உருவாக்கப்பட்ட சக்கரம் முதல் தற்பொழுது உள்ள AI வரைக்கும் பல இடங்கள்ல பொறியியல் தான் முக்கிய பங்கு வகிச்சு இருக்கு. இன்றும் தினம்தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு பொறியாளர்கள் தான் அவசியமாக இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உறுதியான வேலை வாய்ப்புகள்: பொறியியல் பட்டதாரிகளுக்கு உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் இருக்கு. உங்கள் எதிர்காலத்தை உலகம் முழுவதும் உள்ள எந்த நாடுகளிலும் அமைத்துக் கொள்ளலாம். மேலும் தற்பொழுது உள்ள தட்டுப்பாடு காரணமா நிச்சயமான வேலை வாய்ப்புகளும் பொறியாளர்களுக்கு உறுதி. இதற்க்கு பெருகி வரும் தொழில் நுட்பமே காரணம் !
சமுதாயம் மீதான பொறியியலின் தாக்கம் : முன்பே குறிப்பிட்டது போல மனித சமூகம் முன்னேற ஆதி முதல் கண்டறிந்த பொறியியல் கண்டுபிடிப்புகள் தான் காரணம். சக்கரம், மின்சாரம், வாகனம், கட்டிடவியல் என பல விதத்துல பொறியியல் முக்கிய பங்கு வகிச்சு இருக்கு.
பொறியாளரா உருவாவது அவ்வளவு சுலபமல்ல அதற்க்கு பல திறன்கள் வேண்டும் முக்கியமாக critical thinking, problem-solving skills, and creativity. ஒவ்வொரு நாளும் அவர்கள் கையாளும் புதிய புதிய சவால்கள் தான் ஒரு சிறந்த தொழில் நுட்பத்தை உருவாக்கும்.
சரி! பொறியியலில் எந்தெந்த பிரிவுகள் தற்பொழுது பயில ஏற்றதாக இருக்கும்?
1. Robotic Engineering
2. Mechanical Engineering
3. Electrical Engineering
4. Computer Engineering
5. Cyber Security Engineering
Robotic Engineering – உங்களுக்கு Mechanical, Electrical, Computer மற்றும் Control Engineering போன்றவற்றில் ஆர்வம் இருந்தா நீங்க தேர்ந்தெடுக்க வேண்டியது தான் Robotics Engineering. மேற்கண்ட அனைத்தையும் சேர்ந்த ஒரு துறை தான் Robotics. புதிய தொழில்நுட்பபுரட்சியையே உருவாக்கும் இந்த துறையின் சராசரி ஊதியம் 58 லட்சம் முதல் 1 கோடி பிந்தைய ரூபாய்.
இதற்கான பட்டங்கள்:
Bachelor of Science in Robotics Engineering
Master of Science in Robotics Engineering
PhD in Robotics Engineering
Mechatronics Engineering
Artificial Intelligence (AI) and Robotics
Computer Vision for Robotics
Mechanical Engineering : இயந்திரங்கள் தொடர்பான வேலைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த பிரிவு சரியானதாக இருக்கும். இயந்திர வடிவமைப்பு, உருவாக்கம், இயந்திர பராமரிப்பு போன்ற பல வேலைவாய்ப்புகள் இதில் அடங்கும்.
இன்று உள்ள பல கடினமான வடிவமைப்புகள் கொண்ட இயந்திரங்களை வடிவமைக்க இந்த துறை பொறியாளர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான சராசரி ஊதியம் வருடத்திற்கு 62 லட்சம் ரூபாய்.
இதற்கான பட்டங்கள்:
Bachelor of Science in Mechanical Engineering
Master of Science in Mechanical Engineering
PhD in Mechanical Engineering
Robotics and Control Engineering
Automotive Engineering
Aerospace Engineering
Materials Science and Engineering
Mechatronics Engineering
Electrical Engineering: உலகை இயக்கும் முக்கிய சக்திகளுள் ஒன்று மின்சாரம். அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வது முதல் அதனை விநியோகம் செய்வது வரை பல வேளைகளில் இந்த துறையின் பங்கு மிக முக்கியம். அது தவிர மின்சாதனங்களை கையாளுவது உள்ளிட்ட வெவ்வேறு பணிகளில் மின்பொறியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதற்கான பட்டங்கள்:
Bachelor of Science in Electrical Engineering
Master of Science in Electrical Engineering
PhD in Electrical Engineering
Power Systems Engineering
Control Systems Engineering
Telecommunications Engineering
Computer Engineering
Computer Engineering: அனைத்து தொழில்நுட்பத்திற்கும் அடிப்படையான மென்பொருள், கணினி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் தான் இந்த துறையின் வேலை!
இதற்கான பட்டங்கள்:
Bachelor of Science in Computer Engineering
Master of Science in Computer Engineering
PhD in Computer Engineering
Cyber Security Engineering : தொழில் நுட்பங்களும் தொழில் நிறுவனங்களும் அளவுக்கு வளருதோ அந்த அளவுக்கு இணையத்தின் பயன்பாடு அதிகரித்து இருக்கு. இன்று அனைத்துமே ஆன்லைன் மூலம் தான் கையாளப்படுகிறது. மிக ரகசியமான தகவல்கள், தரவுகள் என எல்லாமே இணையம் மூலம் எளிதாக அனுப்பப்பட்டாலும் அதுல ஆபத்துகளும் நிறைய இருக்கு. தரவுகளை பாதுகாப்பாக வைக்கவும் அதனைக் கையாளவும் Cyber Security மிக முக்கியம். அதற்கான துறை தான் Cyber Security Engineering. எதிர்காலத்துல இந்த துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
இதற்கான பட்டங்கள்:
Bachelor of Science in Robotics Engineering
Master of Science in Robotics Engineering
PhD in Robotics Engineering
Mechatronics Engineering
Artificial Intelligence (AI) and Robotics
Computer Vision for Robotics