TamilSaaga

“இன்று இரவு என் மனைவியுடன் படு” – சிங்கப்பூரில் சக ஊழியருக்கு “மனைவியை விருந்தாக்கிய” கணவன்

சட்டங்கள் மற்றும் தண்டனைகள் கடுமையாக இருக்கும் தற்போதுள்ள காலக்கட்டத்திலும் தனது சொந்த மனைவியை சக ஊழியருக்கு விருந்தாக்க முயன்றிருக்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த நபர்.

ஜான்(பெயர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது) என்னும் நபர் தனது சக ஊழியரை வீட்டிற்கு அழைத்து, மயக்கமடைந்த தனது மனைவியுடன் அவர் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணின் மூன்று குழந்தைகளும் வீட்டு வேலைக்காரரும் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இருப்பினும், அந்த நபர் விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர் என்பதால், அவரால் அந்த செயலை முடிக்க முடியவில்லை. இந்த நிலையில், 47 வயதான அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் நடக்காத நிலையில் பலாத்காரம் செய்ய சதி செய்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் Student Passல் இருப்பவர்களுக்கு S Passல் வேலை” – Diploma அல்லது Degree படித்திருந்தால் போதும்

இதில் என்னவொரு கொடுமை என்றால், சில வருடங்களாகவே மனைவியை பகிர்ந்து கொள்வது குறித்து ஜானும் அந்த நபரும் பேசி வந்திருக்கின்றனர். 2015 ஆம் ஆண்டிலேயே குற்றம் சாட்டப்பட்டவருடன் ஜான் தனது பாலியல் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களையும் தனது மனைவியை மற்றொரு ஆணுடன் பகிர்ந்து கொள்ள தான் விரும்புவது குறித்தும் விவாதித்து இருக்கிறார்.

அதாவது, தனது மனைவியுடன் வேறொரு ஆண் உடலுறவு கொள்வதை பார்ப்பதே ஒரு போதை.. அது ஒரு அற்புதமான கற்பனை என்று அந்த நபருடன் ஜான் விவாதித்து இருக்கிறார். அப்போது தான் அந்த நபர், நானே உன் மனைவியுடன் உடலுறவு கொள்கிறேன் என்று ஐடியா கூற, மறுப்பேதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார் ஜான்.

பின்னர் ஆகஸ்ட் 31, 2017 அன்று இரவு, ஜான் அந்த நபரை அழைத்து, தனது மனைவி ‘தயார்’ என்று கூறியிருக்கிறார். இருப்பினும், ஜான் தன் மனைவியிடம் இதற்கு சம்மதம் கேட்கவில்லை.

உண்மையில், ஜானுடைய மனைவி குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்குச் வருவதையே, அவருடன் உடலுறவு கொள்வதையோ ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்துக்கு முன்பாக, ஜான் தனது மனைவிக்கு மது மற்றும் போதைப்பொருளைக் கொடுக்க, அவர் படுக்கையில் மயக்கமடைந்துவிட்டார்.

பின், அந்த நபரை ஜான் பெட்ரூமுக்குள் அனுமதித்த போது, அவரது மனைவி அங்கு மயக்க நிலையில் நிர்வாணமாக இருந்தார். பிறகு அந்த நபர் ஜானின் மனைவியுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கினார். இதனை அந்த அறையில் இருந்து கொண்டே ஜான் ரசிக்கத் தொடங்கினார்.

அப்போது தனக்கு விறைப்புத்தன்மை ஏற்படவில்லை என்பதனால், ஜான் அந்த நபரிடம் வேறு மாதிரியாக உடலுறுவு கொள்ளுமாறு அந்த நபருக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் தனது ஆடைகளை முழுவதையும் களைந்து, அந்த பெண்ணின் உதடுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் முத்தமிட்டார். இவை அனைத்தையும், கணவர் ஜான் படுக்கையின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, அந்த நபர் ஆணுறையை கழற்றிவிட்டு 30 – 45 நொடிகள் உடலுறவு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், அந்த நபருக்கு விறைப்புத்தன்மையில் தொய்வு ஏற்பட உடலுறவு கொள்ள முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட பிறகு அந்த நபருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவர் விறைப்புத்தன்மை அற்றவர் என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த சூழலில், பாதிக்கப்பட்ட பெண் மெல்ல மெல்ல சுயநினைவு பெறத் தொடங்கியபோது தனது கணவனைத் தவிர வேறு யாரோ தன்னுடன் உடலுறவு கொள்ள முயற்சிப்பதை உணர்ந்தாள். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பிறகு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்த அப்பெண், அந்த நபரையும், தனது கணவர் ஜானையும் வாக்குமூல கடிதங்களை எழுத வலியுறுத்தினார். குற்றம் சாட்டப்பட்ட நபர், வாக்குமூல கடிதத்தை எழுதியும் கொடுத்தார்.

அந்த கடிதத்தில், தான் ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வீட்டில் இருந்ததாகவும், “எல்லாம் சரியாக இருப்பதாக” ஜானால் கூறியதால் தான் வீட்டிற்க்கு வந்ததாக கூறியுள்ளார். அதாவது, அவரது மனைவியும் இதற்கு ஒப்புக்கொண்டு தனக்காக காத்திருப்பதாக நினைத்து தான் சென்றதாகவும், ஆனால் அவர் மயக்கத்தில் இருந்தது வீட்டிற்கு சென்ற பிறகு தான் தெரிய வந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் அழுகிய உடல்களுடன் பணிசெய்யும் மனிதன் – நீங்க ரியல் ஹீரோ

இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் இவர்தான்.

டுடே ஆன்லைனின் தகவலின் படி, நீதிபதி ஏடிட் அப்துல்லா, “பாதிக்கப்பட்டவரின் வீட்டின் புனிதத்தன்மையில்” குற்றம் நடந்துள்ளது, அது அவருக்கு பாதுகாப்பான இடமாக இருந்திருக்க வேண்டும்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜானின் மனைவி காவல்துறையில் புகார் அளித்த பிறகு தான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் ஜானின் மொபைலில் தனது அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார்.

கணவனும் மற்றவர்களும் தனக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் சந்தேகப்பட்டார். CNA இன் தகவலின் படி, மனைவியை பகிர்ந்து கொள்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலில் ஜானும் ஒருவர் என்பதை கண்டறிந்துள்ளது. அதாவது Wife-Sharing எனும் இந்த செயல்பாடுகளில் சிங்கப்பூரில் இதுவரை ஈடுபட்டுள்ள 7 ஆண்களில் ஜானும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

மனைவியை பகிர்ந்து கொள்ளும் இந்த மோசமான செயல்பாடு, சமீபத்தில் தான் அண்டை நாடான இந்தியாவில் புயலை கிளப்பியிருந்தது. அங்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாட்ஸ்அப், டெலிகிராம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது.

5000 முதல் 10,000 நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கும் டெலிகிராம், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் மூலமாக தங்கள் மனைவிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது கேரள போலீசாரை தலை சுற்ற வைத்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இது போன்று கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்குவதாகவும், சாதாரண தொழிலாளிகள் தொடங்கி திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த குழுக்களில் இருப்பதும், மனைவிகளை பகிர்ந்து கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts