என்னவென்று சொல்வது இந்த தாயை.. பாராட்டுவதா? நினைத்து வருந்துவதா?
சிங்கப்பூர் பூங்காவில் Splash Safari show-ல் கடல் சிங்கம் ஒன்று பார்வையாளர்களுக்கு வித்தை காட்டிக் கொண்டிருந்தது. அந்த ஷோவில், பலர் கலந்து கொண்டிருந்த நிலையில், ஒரு தாய் தனது மகனுடன் வந்திருந்தார். அந்த சிறுவனுக்கு 4 வயது இருக்கலாம்.. அல்லது அதிகபட்சம் 5 வயது இருக்கலாம். சிறுவன் என்று கூட சொல்ல முடியாது. குழந்தைன்னு தான் சொல்லணும்.
அப்போது அந்த கடல் சிங்கம் தண்ணீரை பார்வையாளர்கள் மீது பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது. அந்த பெண் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
அப்போது யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், தண்ணீரில் நனைவதில் இருந்து தன்னை பாதுகாக்க அந்த பெண் தனது மகனை கேடயமாக பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்! போர் வீரர்கள் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கேடயத்தை தங்கள் முன்னால் நிலைநிறுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்வது போல், தனது மகனை தனக்கு முன்னால் கேடயம் போல் தூக்கி பிடித்துக் கொண்டார்.
கடல் சிங்கம் தண்ணீரை பீய்ச்சி அடிக்க, அந்த நீர் சிறுவன் மீது வந்து விழுந்தது. நீர் மிக வேகமாக வந்து விழுந்ததில், அந்த சிறுவன் ரொம்பவே சிரமப்பட்டான். கதறி அழுதான். கை, கால்களை உதறிக் கொண்டு அவன் அழுவதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
வீடியோ இந்த லிங்கில் – https://www.facebook.com/groups/singaporeincidents/posts/255228003355459/
ஆனால், அந்த பெண் எதற்கும் அசரவில்லை. மகன் இப்படி கதறுகிறானே என்றும் கலங்கவில்லை. தன்னை தண்ணீரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் துளியும் அசைந்து கொடுக்கவில்லை.
இந்த வீடியோவை சிங்கப்பூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பலரும், “இந்த வருடத்தில் சிறந்த தாய் இவர்” என்று பதிவிட்டு வருகின்றனர்.
எங்களின் அபிமான கலைஞர் ஒரு நிரந்தரமான தோற்றத்தை ஏற்படுத்துவார், மேலும் கடலைக் காப்பாற்ற நாம் அனைவரும் எவ்வாறு நமது பங்கைச் செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வைப்பார்.