TamilSaaga

இந்த வாரம் முதல் Circle Line MRT விரிவாக்கப்பணிகள் காரணமாக வரும் மாற்றங்கள்!

சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக வட்டப்பாதை வழித்தடம் (circle line rail ) விளங்குகிறது. ஆம்,இந்த உலகில் ஒவ்வொரு நாடும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.அந்த வரிசையில் சிங்கப்பூர் ஓரடி முன்னே இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.இதில் ஒன்று தான் வட்டப்பாதை வழித்தடம், இது ஓட்டுனரே இல்லாமல் தானாக இயங்கும் ஒரு ரயில் சேவை.இதன் பாதையை வட்ட வடிவமாக பல்வேறு நகரங்களை இணைத்து ரயில் சேவையை அமைத்திருக்கிறார்கள்.போக்குவரத்து நெரிசல் பெருகிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ரயில் சேவை பெரிதும் உதவியாய் இருக்கிறது.ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு துரிதமாக செல்வதற்கு ரயில் சேவை சிறந்த தேர்வாக இருக்கும்.

அப்படிப்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை புகுத்தி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வட்டப்பாதை வழித்தடம் தானியங்கி வழித்தடமாக இயங்குகிறது.இந்த ரயிலை இயக்குவதற்கு ஓட்டுனரின் அவசியம் இல்லை.இந்த வட்டப்பாதை வழித்தடம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்தை தொடங்கியது.இந்த வட்டப்பாதை முழுமையாக முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அதாவது 2026க்குள் இந்த circle line rail முழுமையாக முடிவடைந்து விடும். circle line rail முடிந்த பின் இதுவே உலகின் மிகப்பெரிய வட்டப்பாதை வழிதடமாக இருக்கும்.

இந்த circle line rail பல்வேறு இடங்களை வட்ட வடிவமாக இணைக்கிறது. எனினும் இது முழுமையாக வட்ட வடிவமாக இருக்காது இடையில் சிறிய இடைவெளி இருக்கும். ஆனால் இதன் வழித்தடம் கிட்டத்தட்ட வட்ட வடிவத்தை ஒத்து இருப்பதால் இதனை circle line rail என்று அழைக்கின்றனர். இந்த circle line rail-ல் புதிய அறிவிப்பு ஒன்று லேண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி அறிவித்திருக்கிறது. அதாவது Circle Line rail expansion வேலை மே மாதம் 24 ஆம் தேதி 2024 வரை நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் தற்போது முன்கூட்டியே இந்த வேலை முடிவடைந்து வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி முதல் ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என அறிவித்திருக்கிறது.திட்டமிட்ட வேலைகள் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே முடிவடைந்து இருப்பதால் லேண்ட் டிரான்ஸ்போர்ட் அமைச்சகம் மகிழ்ச்சியுடன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறது.


இந்த ரயில் சேவை Harbour front, Telok Blangah, Labrador Park மற்றும் Kent Ridge ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கிறது. அக்டோபர் மாதம் 2023லிருந்து மே மாதம் 2024 வரை Thomson-East Coast Line ரயில் சேவை குறுகிய இயக்க நேரம் மட்டுமே செயல்பட்டு வந்தது.இந்த CCL stage 6 முடிவடைந்த பின் வழக்கம்போல் ரயில் சேவைகள் இயங்கும் என அறிவித்திருக்கிறது. இந்த ரயில் தட சேவை பணிகள் 126 நாட்கள் நடைபெறும் இடம் திட்டமிட்ட நிலையில் 77 நாட்கள் போல் வேலைகள் முடிந்துவிட்டது.எனவே பயணிகள் தங்களுடைய ரயில் பயணங்களை வழங்க போல் தொடரலாம்.

இந்த circle line rail expansion குறுகிய காலகட்டத்திற்குள் முழுமையாக முடிவடைந்ததால் லேண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி அடுத்த கட்டத்தை தொடங்கி இருக்கிறது.அதாவது இந்த வட்டப்பாதை வழித்தடத்தின் கடைசி பாதையை நிறுவ வேலைகளை ஆரம்பித்திருக்கிறது.இந்த கடைசி கட்டத்தில் மூன்று ரயில் நிலையங்களை நிறுவ இருக்கிறது,அவை Keppel, Cantonment மற்றும் Prince Edward ரயில் நிலையங்கள் ஆகும்.இந்த கடைசி கட்டத்தை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் அதாவது 2026க்குள் முழுமையாக முடிவடையும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கிறது.அதன்படி வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு வெகு விரைவில் வட்டப்பாதை வழி தடத்தின் கடைசி கட்டத்தை இணைப்போம் என்று லேண்ட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி நம்பிக்கை அளிக்கிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts