TamilSaaga

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தொடர் தடைகள் : “நட்பற்ற நாடுகளின் பட்டியலில்” சிங்கப்பூரை இணைத்த மாஸ்கோ – சிங்கப்பூர் நிறுவனங்கள் பாதிக்கப்படுமா ?

ரஷ்யா, அதன் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு எதிராக “நட்பற்ற செயல்களைச் செய்யும்” நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பட்டியலில் தற்போது சிங்கப்பூரை சேர்த்துள்ளதாக மாஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. TASS என அழைக்கப்படும் ரஷ்ய செய்தி நிறுவனம் நேற்று மார்ச் 7ம் தேதியன்று வெளியிட்ட செய்தியில் சிங்கப்பூரும் மற்ற நாடுகளுடன் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

“வெளிநாட்டினருக்கு மிகவும் பாதுகாப்பான நாடு” : உலக அளவில் நம்ம சிங்கப்பூருக்கு 5வது இடம் – பெருமைப்பட வைக்கும் William Russell ரிப்போர்ட்

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், UK, உக்ரைன், மாண்டினீக்ரோ, சுவிட்சர்லாந்து, அல்பேனியா, அன்டோரா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, நார்வே, சான் மரினோ, வடக்கு மாசிடோனியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மைக்ரோனேஷியா, நியூசிலாந்து, மற்றும் தைவான். ஆகிய நாடுகள் சிங்கப்பூருடன் சேர்த்து “நட்பற்ற செயல்களைச் செய்யும்” நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதை அடுத்து. “நட்பற்ற நாடுகளின்” நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடனான அனைத்து கார்ப்பரேட் ஒப்பந்தங்களும் இனி அரசாங்க ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.

ரஷ்யா மீது சிங்கப்பூர் விதித்த தடைகள் என்ன?

“உக்ரேனில் போரை நடத்தும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்தும் அனைத்தயும் சிங்கப்பூர் மேற்கொள்ளும். குறிப்பாக உக்ரேனிய மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அடிபணியவைக்கும் ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதைத் சிங்கப்பூர் தடுக்கும்”. இதை பிப்ரவரி 28 அன்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் MFA வெளியிட்ட அறிவிப்பில் “இந்தத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உக்ரைனுக்கு எதிராகப் போரை நடத்தும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உக்ரேனியர்களுக்கு தீங்கு விளைவிக்க அல்லது அடிபணியச் செய்ய ஆயுதங்களாக நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம்” என்று கூறியது.

ஏமாற்றி ஊருக்கு வர வைத்த பெற்றோர்… காதலை விட்டுக் கொடுத்து சிங்கப்பூரை விட்டே வெளியேறிய “வலிமை” பெண் – இந்த நொடி வரை தேடும் வெளிநாட்டு ஊழியர்

அதேபோல ரஷ்யாவிற்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க கூடுதலாக, சிங்கப்பூர், ரஷ்யா மீது நிதிக் கட்டுப்பாடுகளையும் விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்முலம் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய வங்கிகள், நிறுவனங்கள், செயல்பாடுகள் மற்றும் ரஷ்ய அரசாங்கத்திற்கு பயனளிக்கும் நிதி திரட்டும் செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கும். டிஜிட்டல் பேமெண்ட் டோக்கன் சேவை வழங்குநர்கள், கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளும், NFTகள் போன்ற டிஜிட்டல் சொத்துகளும் இந்த முடக்கத்தில் அடங்கும்.

நட்பற்ற நாடுகளில் பட்டியலில் சிங்கப்பூர் சேர்க்கப்பட்டாலும், ரஷ்யா மீதான தடைகளை சிங்கப்பூர் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய மற்றும் சிறிய என்று அனைத்து நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை மதிக்கப்பட வேண்டும் என்று நமது சிங்கப்பூ பிரதமர் லீ சியன் லூங் கூறியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts